Pradeep: கவினை அடிச்சதுக்கு பின்னால் கூட இப்படி ஒரு பயங்கரமான ஸ்ட்ராட்டஜி! 4 வருஷத்துக்கு பின் கூறிய பிரதீப்!
கவின் பிக்பாஸ் போட்டியாளராக இருந்த போது, அவரை பார்க்க வந்த பிரதீப் ஏன், கவினை அடித்தேன் என்று முதல் முறையாக கூறியுள்ள தகவல் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சில திரைப்படங்களில் நடித்ததன் மூலமாகவும், கவினின் நண்பனாகவும் அறியப்பட்ட பிரதீப் ஆண்டனி போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டார். சைக்காலஜி உள்ளிட்ட பல பட்டபடிப்புகளை படித்துள்ள இவர், பிக்பாஸ் வீட்டுக்கு டைட்டில் வெல்ல வேண்டும் என்கிற முனைப்புடன் கலந்து கொண்டது மட்டும் இன்றி தன்னுடைய சட்டம் படிக்க வேண்டும் என்கிற கனவுக்காகவும் இதன் மூலம் வரும் பணம் தேவை என்பதை தெரிவித்தார்.
மேலும் தன்னுடைய ஒவ்வொரு மூவையும் பிக்பாஸ் வீட்டில் டைட்டிலை மையப்படுத்தியே நகர்த்தினார். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்கிற பழமொழிக்கு ஏற்ப, ஓவராக பிக்பாஸ் வீட்டில் பொல்யூட் செய்து விளையாடியதால், இன்றையதினம் ஒரேயடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என, ஹவுஸ் மேட்ஸ் சிலர் கூறிய காரணங்கள், பிரதீப் இந்த அளவுக்கு மோசமாக நடந்து கொண்டாரா என நினைக்க வைத்தது. இந்நிலையில் இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தன்னுடைய நண்பன் கவினை பிக்பாஸ் வீட்டின் உள்ளே பார்க்க வந்தபோது, கவினை அடித்தது கூட ஸ்ட்ராட்டஜி தான் என்று விசித்ராவிடம் கூறிய தகவல் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
அந்த சமயத்தில் லாஸ்லியாவை கவின் காதலித்து வந்ததால், ஒருவிதமான நெகட்டிவ் இமேஜ் இருந்தது, எனவே வெளியே உள்ள எல்லோரும் கவினை தப்பா நினைத்தார்கள். அப்படிப்பட்ட தோற்றத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக தான் அவனை அடித்தேன் என்று பிரதீப் ஆண்டனி கூறினார். கவினை நான் அடித்த பிறகு எல்லோரும் கவினின் நெகட்டிவ்வை மறந்துவிட்டு என்னைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். என்னை தான் நெகட்டிவ் ஆக பார்த்தார்கள், கவின் பாசிட்டிவ் ஆகிவிட்டான் என்றும் இந்த ஸ்ட்ராட்டஜி நன்றாக ஒர்க் அவுட் ஆனதாக தெரிவித்தார்.
ஆனால் விசித்ரா பிரதீப்பின் ஸ்டேர்ஜியை ஒப்புக்கொள்ளாமல், எப்படி ஒருத்தரை கை நீட்டி அடிக்கலாம், இதை வாழ்நாள் முழுவதும் கவின் மறக்க மாட்டார் என்பது போல் கூற, இதற்க்கு பிரதீப் கவினுக்கு என்னை பற்றி தெரியும், அதே போல் எனக்கும் கவினை பற்றி நன்றாக தெரியும். அவன் ஒருபோதும் தன்னை தவறாக நினைக்க வாய்ப்பில்லை என கூறினார்.
பிரதீப் 4 வருடத்திற்கு முன்பே இப்படி பக்காவாக பிளான் போட்டு, ஒரு ஸ்டேடர்ஜி மூலம் கவினுக்கான
ரசிகர்கள் கூட்டத்தை அதிகரித்துள்ளார் என்கிற தகவலை கேட்டு பலர் வாயடைத்து போய் உள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D