இவ்வளவு சீப் ஆக நடந்துகொண்டாரா பிரதீப்... கமல் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியதன் ஷாக்கிங் பின்னணி!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து, நடிகர் பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டுள்ளதாக, சில நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, அக்டோபர் 1-ஆம் தேதி 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரமாண்டமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்தே, ஒரு சில போட்டியாளர்கள் கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக, அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் விதமான விஷயங்களை செய்து வருகிறார்கள்.
குறிப்பாக பிரதீப், மாயா, பூர்ணிமா, போன்ற போட்டியாளர்கள் பிறர் மனதை அதிகம் நோகடித்து விளையாடி வருகின்றனர். விஷ்ணு, நிக்சன், போன்றவர்கள் தேவையில்லாத இடத்தில் கோவத்தை வெளிப்படுத்தியதாகவும் பார்க்கப்பட்டது. இந்த லிஸ்டில் இருந்த விஷ்ணுவுக்கு கடந்து வாரம் கமலஹாசன் சூடு போட்டதால், இந்த முறை கொஞ்சம் அடக்கி வாசித்தார்.
ஆனால் பிரதீப் ஆண்டனி, பெல் டாஸ்க் விஷயத்தில் கூல் சுரேஷ்... பொய் சொன்னதாக கூறி, அளவுக்கு மீறி அவரை திட்டியது மட்டுமின்றி, பீப் போடும் அளவுக்கு தகாத வார்த்தைகள் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் ஒரு கட்டத்தில், இனி பிக் பாஸ் வீட்டில் இருக்க மாட்டேன் என கூல் சுரேஷ் வீட்டை விட்டு வெளியேற, அவரை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்து மீண்டும் விளையாட வைத்தனர்.
BB Tamil 7
இந்த விஷயம் தொடர்பாக கூல் சுரேஷிடம் பிரதீப் மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும், சமாதானமாக பேசினார். இப்படி பேசுவது என் இயல்பு என கூறியதையும் பார்க்க முடிந்தது. இதை தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் பல குற்றச்சாட்டுகளை போட்டியாளர்கள் அவர் மீது வைத்து, ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
BB Tamil 7
குறிப்பாக, ரவீனா என்னுடைய அரணாகயிறு பற்றி கமெண்ட் செய்ததாக கூறினார், பூர்ணிமா அவர் இருக்கும் இடத்தில் நைட் தூங்குவதற்கு பயமாக இருப்பதாக தெரிவித்தார். அதே போல் நிக்சன் பாத்ரூம் கதவை சாத்தாமல் டாய்லெட் போய் கொண்டிருந்தார் என்றும், தன்னை மிரட்டுவதாகவும் அடுத்தடுத்து மிகவும் அதிர்ச்சியான குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். இது தான், கமல் பிரதீபுக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்ப மிக முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகிறது.
டைட்டில் வெல்லும் அளவுக்கு திறமை இருந்தும், கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் பிக் பாஸ் வீட்டை பரபரப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவும், வாய் அடக்கம் இன்றியும், ஒழுக்கமின்மையோடு விளையாடியதால் விளைவே பிரதீபுக்கு ரெட் கார்டு வழங்கும் அளவுக்கு வந்துள்ளது என, சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் பலர் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இவரை தொடர்ந்து இந்த வாரம், நாமினேஷன் படலத்தில் சிக்கிய போட்டியாளர்களின், கடந்த வாரம் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே வந்த தினேஷ், கானா பாலா, பிராவோ, அர்ச்சனா, அன்ன பாரதி, ஆகிய ஐந்து பேரில் அன்னபாரதி மிகவும் குறைவான ஓட்டுகள் பெற்று, உள்ளே வந்த ஒரே வாரத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் என கூறப்படுகிறது.