MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழின் நளதமயந்தி சீரியலுக்கு தாவிய பிரபல நடிகை... காத்திருக்கும் செம்ம ட்விஸ்ட்

விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழின் நளதமயந்தி சீரியலுக்கு தாவிய பிரபல நடிகை... காத்திருக்கும் செம்ம ட்விஸ்ட்

நந்தா, ப்ரியங்கா நல்காரி நடிப்பில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நள தமயந்தி சீரியலில் பிரபல நடிகை ஒருவர் நியூ எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.

1 Min read
Author : Ganesh A
Published : May 06 2024, 03:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
nala damayanthi Serial

nala damayanthi Serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நளதமயந்தி. திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 10.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நாயகனாக நந்தா மாஸ்டர் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரியங்கா நல்காரி நடித்து வருகிறார். விறுவிறுப்பான கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

24
nala damayanthi Serial Nandha

nala damayanthi Serial Nandha

தனக்கு உயிர் கொடுத்து மீண்டும் வாழ நம்பிக்கையை கொடுத்த பெண்மணியை தேடி வரும் நளன் அது தமயந்தியின் அம்மா தான் என்பதை புரிந்து கொள்ளாமல் அவளிடம் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறான். இதனால் தமயந்தி பற்றிய உண்மைகள் நளனுக்கு எப்போது தெரிய வரும்? இருவரும் எப்போது ஒன்று சேருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. 

இதையும் படியுங்கள்... Indian 2 : தனுஷ் படத்துக்கு வழிவிட்ட கமல்; அதிரடியாக மாற்றப்படும் ‘இந்தியன் 2’ மற்றும் ‘ராயன்’ பட ரிலீஸ் தேதி

34
nala damayanthi Serial Twist

nala damayanthi Serial Twist

இந்த எதிர்பார்ப்புக்கு விடை கிடைக்கும் தருணத்தில் வில்லிகள் சதியால் விபத்தில் சிக்கி கொள்கிறாள் தமயந்தி. இப்படியான நிலையில் தமயந்தியின் தங்கையாக அஞ்சலி எண்ட்ரி கொடுத்துள்ளார் தெய்வம் தந்த பூவே சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீநிதி தான் அஞ்சலியாக எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலிலும் நடித்திருந்தார்.

44
Sreenithi entry in nala damayanthi Serial

Sreenithi entry in nala damayanthi Serial

இனி இவரை வைத்தே கதை நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ஸ்ரீநிதியின் ஸ்டைலிஷ் எண்ட்ரியால் நள தமயந்தி சீரியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த சீரியலில் டிஆர்பியும் எகிற வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்...  OTT star : ஒரு எபிசோடுக்கு 18 கோடி சம்பளம்... ஓடிடியில் வசூல் ராஜாவாக வலம் வரும் நடிகர் யார் தெரியுமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved