Asianet News TamilAsianet News Tamil

Raghava : "அப்பா இல்லை.. படிக்க கஷ்டப்பட்ட மாணவன்".. சிட்டாக தர்மபுரி சென்ற லாரன்ஸ் - நெகிழவைக்கும் வீடியோ!

Raghava Lawrence : மாற்றம் என்ற தலைப்பின் கீழ் இந்த மே மாத துவக்கத்தில் இருந்து பல்வேறு உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து வருகின்றார் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ்.

Actor and Director Raghava Lawrence Mattram Initiative helped boy in Dharmapuri ans
Author
First Published May 12, 2024, 9:34 PM IST

எளிமையான குடும்பத்தில் பிறந்து, சிறு வயதிலேயே தந்தையை இழந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த ஒரு சிறு வாய்ப்பின் மூலம் தமிழ் திரையுலகில் டான்ஸ் அசிஸ்டன்டாக களம் இறங்கியவர் தான் ராகவா லாரன்ஸ். நடனத்தின் மீது அதிக ஆசை கொண்ட ராகவா லாரன்ஸ் பல திரைப்படங்களில் டான்ஸ் அசிஸ்டன்டாக பணியாற்றி வந்தார். 

அதன் பிறகு கோலிவுட் திரையுலகில் நடிகராகவும், நடன இயக்குனராகவும், திரைப்பட இயக்குனராகவும் இப்பொழுது புகழின் உச்சியில் ராகவா லாரன்ஸ் இருக்கின்றார் என்று கூறினால் அது மிகையல்ல. திரைத்துறையில் அவர் பயணிக்க துவங்கிய காலத்தில் இருந்து மாற்றுதிறனாளிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் ஏதோ ஒரு வகையில் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் ராகவா லாரன்ஸ் செய்து வருகிறார். 

சம்பளத்துல வேணா நீங்க அதிகம்.. சொத்துல நான் தான் அதிபதி.. கோடிகளில் புரளும் சூப்பர் ஸ்டார் இவர்தான்..

அண்மையில் பிரபல நடிகர் பாலாவையும் தனது பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருகிறார் லாரன்ஸ். அதேபோல இந்த மே மாதம் முதல் தேதியில் இருந்து "மாற்றம்" என்ற தலைப்பில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை அவர் செய்து வருகிறார். தன்னுடன் பணியாற்றிய சக கலைஞர்களையும் இந்த "மாற்றம்" என்ற நிகழ்வில் பங்கேற்க அவர் ஊக்குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த சூழ்நிலையில் தர்மபுரியில் வசித்து வரும் ஹரிஹரன் என்ற சிறுவனுக்கு படிப்புக்கான உதவியை செய்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். தந்தையை இழந்து படிக்க முடியாத நிலையில் இருந்த ஹரிஹரனை பற்றி கேள்விப்பட்ட லாரன்ஸ், உடனடியாக தர்மபுரி சென்று சிறுவனுடைய தாயை சந்தித்து அவனுடைய ஐஏஎஸ் கனவை நான் நினைவாக்குவேன் என்று உறுதி அளித்தார். 

அந்த தாயும் குடும்ப உறுப்பினர்களும் கண்ணீர் மல்க ராகவா லாரன்சுக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோ இப்பொது இணையத்தில் பெரும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. அண்மையில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் மாற்றம் என்ற இந்த முன்னெடுப்பில் இனைந்தது குறிப்பிடத்தக்கது. 

Allu Arjun : தேர்தல் விதிகளை மீறினாரா? நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு - என்ன நடந்தது? முழு விவரம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios