SKவிற்கு காக்கி சட்டை.. சூரிக்கு கருடன்.. அப்போ துரை அடுத்து இயக்கப்போவது யாரை? அந்த "சூப்பர் ஹீரோவை" தான்!
Durai Senthil Kumar : பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் துரை செந்தில்குமார்.
ethir neechal
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, அதன் பிறகு கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனின் "எதிர்நீச்சல்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் தான் 42 வயது நிரம்பிய துரை செந்தில்குமார்.
Pattas
தொடர்ச்சியாக தமிழில் "காக்கிச்சட்டை", தனுஷின் "கொடி" மற்றும் "பட்டாஸ்" உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற துரை செந்தில்குமார் இயக்கத்தில் அண்மையில் சூரியின் நடிப்பில் வெளியான "கருடன்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது.
soori
விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான கதை எழுதும் பணியிலும் இயக்குனர் துரை செந்தில்குமார் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கருடன் பட வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த பட பணிகளை விரைவில் அவர் துவங்க உள்ளார்.
Legend Saravanan
அந்த திரைப்படத்தில் பிரபல தொழிலதிபரும், நடிகருமான லெஜெண்ட் சரவணன் அவர்கள் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. கமர்சியலாக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த துரை செந்தில்குமார், தற்பொழுது ஒரு மாபெரும் கமர்சியல் நடிகரோடு இணைந்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.