MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Balayya Net Worth : அசாத்திய காட்சிகளை சாத்தியமாக்கிய மாஸ் ஹீரோ.. பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

Balayya Net Worth : அசாத்திய காட்சிகளை சாத்தியமாக்கிய மாஸ் ஹீரோ.. பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

பிரபல தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Ramya s
Published : Jun 13 2024, 04:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Balakrishna

Balakrishna

நடிகர், தயாரிப்பாளர் அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர் பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. பாலையா என்று தனது ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் தெலுங்கு திரையுலகிலும் ஆந்திர அரசியலிலும் தவிர்க்க முடியாத நபராக இருக்கிறார். 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் அவர், தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

29
Nandamuri Balakirishna

Nandamuri Balakirishna

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான என்.டி.ராமாரவின் மகனான பாலகிருஷ்ணா தனது 14 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சில ஆண்டுகளில் ஹீரோவான அவர், பஞ்ச டயலாக், ஆக்‌ஷன், தனித்துவமான நடனம், மாஸான சண்டைக்காட்சிகள் ஆகியவை மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார் பாலகிருஷ்ணா.

39
Nandamuri Balakirishna movies

Nandamuri Balakirishna movies

புராணக் கதையாக இருந்தாலும் முதல் ராபின் ஹூட் கதாபாத்திரங்கள் வரை பல கதாப்பாத்திரங்களில் நடித்து அசத்தி உள்ளார். குறிப்பாக ஒற்றை விரல் அசைவில் வேகமாக வரும் ரயிலை திருப்பி அனுப்புவது, துப்பாக்கியால் சுட்டு விமானத்தை நிறுத்தும் காட்சி, பைக்கில் சென்று ரயிலை சேஸ் செய்யும் காட்சி என பல அசாத்திய காட்சிகளை சாத்தியமாக்கியவர் பாலகிருஷ்ணா. பாலய்யாவின் இந்த காட்சிகள் தெலுங்கு திரையுலகை தாண்டி இந்திய அளவில் பிரபலமானவை.

49
Balakirishna Movies

Balakirishna Movies

தெலுங்கு திரையுலகில் இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், தொடர்ந்து படங்களில் ஹீரோவாகவே நடித்து வருகிறார். அவரின் பல படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் படங்களாக மாறி உள்ளன.

59
Nandamuri Balakirishna

Nandamuri Balakirishna

சாஹஸமே ஜீவிதம், ஜனனி ஜென்மபூமி, நரசிம்ம நாயுடு, லக்ஷ்மி நரசிம்மா, சமரசிம்மா ரெட்டி, சிம்மா, லெஜெண்ட், அகண்டா என பல பிளாக்பஸ்டர் படங்களில் அவர் நடித்துள்ளார். கடைசியாக பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படமும் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.

69
Nandamuri Balakirishna

Nandamuri Balakirishna

தெலுங்கு சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் பாலகிருஷ்ண இருக்கிறார். அவர் ஒரு படத்திற்கு ரூ.25 கோடி முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். NBK ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் வைத்திருக்கிறார்..

79
Balakrishna Networth

Balakrishna Networth

இந்த நிலையில் பாலகிருஷ்ணாவின் சொத்துமதிப்பு பற்றி தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் பாலகிருஷ்ணாவின் குடும்ப சொத்து மதிப்பு ரூ.480 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 283 கோடி அசையா சொத்துக்களும், 14 கோடி அசையா சொத்துக்களும் அடங்கும். தனது குடும்பத்திடம் 5.9 கிலோ தங்கம், 156 கிலோ வெள்ளி, 580 கேரட் வைரம் என மொத்தம் 7 கோடி மதிப்பிலான நகைகள் இருக்கிறதாம். 

89
Nandamuri Balakirishna business

Nandamuri Balakirishna business

ரியல் எஸ்டேட், விவசாயம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ள அவர் ஒரு தொழிலதிபராகவும் இருக்கிறார்.. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா முழுவதும் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பல்பொருள் அங்காடிகளின் சங்கிலியை அவர் சொந்தமாக வைத்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களில் நடிப்பதன் மூலமும் அவர் நல்ல வருவாயை ஈட்டி வருகிறார்.

 

99
Nandamuri Balakirishna political carer

Nandamuri Balakirishna political carer

ஆனால் பாலகிருஷ்ணாவின் பயணம் வெள்ளித்திரையில் மட்டும் நின்றுவிடவில்லை. தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அரசியல் உலகிற்கு அடியெடுத்து வைத்தார். தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த அவர், 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் இந்துபுரம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். சமீபத்தில் அங்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இந்துப்புரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அவர் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
பாலகிருஷ்ணா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved