காதலுக்கு எதிர்ப்பு.. காதலரோடு Live-in.. தன் திருமண வரவேற்பில் பங்கேற்ற மகன் - ஓப்பனாக பேசிய தமிழ் நடிகை!
Tamil Actress : தனது காதலரோடு Live-In உறவில் இருந்தது குறித்து பிரபல நடிகை ஒருவர் பேசியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது, அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
Swetha tamil
சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று புகழ்பெற்ற நடிகை தான் ஸ்வேதா தமிழ். கடந்த பல ஆண்டுகளாக, நல்ல பல சீரியல்களில் இவர் நடித்து வருகின்றார். இவர் பிரபல சீரியல் இயக்குனர் தமிழ் பாரதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர் தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.
director tamil
இந்நிலையில் தனது திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ள நடிகை ஸ்வேதா தமிழ், பெற்றோரின் எதிர்ப்பை மீறித் தான் இயக்குனர் தமிழ் அவர்களை அவர் காதலித்து வந்ததாக கூறியுள்ளார். மேலும் ஒரு கட்டத்தில் அவர் மீது கொண்ட காதலின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி அவருடன் சென்றுள்ளார்.
serial actress
அதன் பிறகு சில ஆண்டுகள் அவரோடு Live-In உறவில் வாழ்ந்து வந்த ஸ்வேதா தமிழுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. அந்த குழந்தை பிறந்ததற்கு பிறகு தான், இரு வீட்டாரும் அவர்களை ஏற்றுக் கொண்டுள்ளனர். பின் அவர்களே இந்த தம்பதிக்கு திருமணமும் செய்து வைத்துள்ளனர்.
Swetha marriage
அவர்களுக்கு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகை ஸ்வேதா மற்றும் இயக்குனர் தமிழ் ஆகியோருக்கு இடையில் அவர்களது மகன் அமர்ந்திருக்கிறார். திருமணத்திற்கு வந்தவர்களிடம் தனது சகோதரியின் மகன் அவர் என்று கூறி மழுப்பியதாகவும் ஸ்வேதா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.