Asianet News TamilAsianet News Tamil

தொடரும் ஹாட்ரிக் விக்கெட் சாதனைகள் – 4 பந்தில் 4 விக்கெட், கிறிஸ் ஜோர்டன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை!

அமெரிக்கா அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டன் டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

England Fast Bowler Chris Jordan took a hat-trick in the T20 World Cup Super 8 match against USA in Barbados.
Author
First Published Jun 23, 2024, 10:42 PM IST

இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையிலான சூப்பர் 8 சுற்று போட்டி பார்படோஸில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய அமெரிக்கா 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஸ்டீவென் டெய்லர் 12 ரன்கள் எடுக்க, ஆண்ட்ரீஸ் கவுஸ் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நிதிஷ் குமார் 30 ரன்கள் எடுக்க, ஆரோன் ஜோன்ஸ் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த கோரி ஆண்டர்சன் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹர்மன்ப்ரீத் சிங் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசியில் வந்த அலி கான், நோஸ்துஷ் கென்ஜிகே, சவுரப் நெட்ராவால்கர் ஆகியோர் வரிசையாக 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். வான் ஷால்க்விக் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக அமெரிக்கா 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் எடுத்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ரீஸ் டாப்ளே ஒரு விக்கெட் எடுத்தார். சாம் கரண் மற்றும் அடில் ரஷீத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். லியாம் லிவிங்ஸ்டன் ஒரு விக்கெட் எடுக்க, கிறிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இந்த போட்டியில் 19 ஆவது ஓவரை கிறிஸ் ஜோர்டன் வீசினார். இதில் 18.1 ஆவது பந்தில் கோரி ஆண்டர்சன் ஆட்டமிழந்தார். 3ஆவது பந்தில் அலி கான் ஆட்டமிழக்கவே, 4ஆவது பந்தில் நோஷ்துஷ் கென்ஜிகே எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். கடைசியாக ஹாட்ரிக் விக்கெட்டிற்கு முயற்சிக்கவே சவுரவ் நெட்ராவால்கர் விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் டி20 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ் ஜோர்டன் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்த தொடரில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் அடுத்தடுத்து ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios