Samantha : பிகினி உடையில்.. சமந்தா நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்! ஹாலிவுட் ஹீரோயின்களே தோத்துடுவாங்க பாஸ்!
நடிகை சமந்தா பிகினி உடையில் நடத்திய உச்சகட்ட கவர்ச்சி போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில், அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டுவருகிறது .
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, கடந்த 6 மாதமாக எந்த படங்களிலும் நடிக்காமல், பல நாடுகளுக்கு சென்று வெக்கேஷனை என்ஜாய் செய்து வந்த நிலையில், தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.
பாலிவுட் படங்களில் சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதால், மும்பையை முகாமிட்டுள்ள சமந்தா, அடிக்கடி அங்குள்ள சில ஸ்டுடியோஸ் மற்றும் வெளியிடங்களுக்கு வந்து செல்லும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
அதே போல் சமந்தா 'சென்னை ஸ்டோரி' என்கிற ஹாலிவுட் படம் ஒன்றில், தமிழ் பெண் வேடத்தில் நடிக்க உள்ளார். கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கிய பின்னர் சமந்தா, விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்கவைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பிகினி உடை மற்றும் சில அல்ட்ரா மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Arthika:கார்த்திகை தீபம் சீரியல் நடிகை ஹர்த்திகாவுக்கு நடந்து முடிந்தது திருமணம்! வெட்டிங் போட்டோஸ்!
பிரபல மேகசீன் ஒன்றிற்காக நடத்தப்பட்டுள்ள இந்த போட்டோஸ் தான் தற்போது சமூக வலைதளத்தின் ஹாட் டாப்பிக் எனலாம். இந்த போட்டோ ஷூட்டில் ஹாலிவுட் நடிகைகளுக்கே சமந்தா செம்ம டஃப் கொடுத்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D