ஜிப் போட மறந்துடீங்களா கமல்..! நடிகையுடன் ஒய்யாரமாக போஸ் கொடுத்த ஆண்டவரை அலறவிடும் பிரதீப் ரசிகர்கள்!
நடிகர் கமல்ஹாசன் பேன்ட்டில் உள்ள ஜிப்பை போடாமல், போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு... நீங்கள் பெண் பாதுகாப்பு பற்றி பேசுறீங்களா? என கேள்வி எழுப்பி வறுத்தெடுத்து வருகின்றனர் பிரதீப் ஆண்டனி ரசிகர்கள்.
kamalhaasan
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், ஒரு சரியான நீதிமானாக இருக்காமல், நீதி தவறி தீர்ப்பு வழங்கிவிட்டதாகவும்... ஒரு தரப்பு குற்றச்சாட்டுகளை கேட்ட அவர், குற்றம் சுமாற்றப்பட்டவரின் பக்கம் உள்ள நியாயத்தை கேட்கவில்லை என பல பிக்பாஸ் ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.
BB Tamil 7
மேலும் பூர்ணிமாவின் பால் மேட்டர், ரவீனாவின் அரணாகயிறு மேட்டர், பாத்ரூம் தாப்பாள் விஷயம் என அனைத்தையும் அலசி ஆராய்ந்து கமல்ஹாசனுக்கே குறும்படம் போட்டு காட்டி வரும் ரசிகர்கள், இந்த வாரம் கமல் இதுகுறித்து கண்டிப்பாக பேச வேண்டும் என்றும், அவர் எடுத்தது தவறான முடிவு என்பதை ஒப்புக்கொண்டு, மீண்டும் பிரதீப் ஆண்டனியை ரீ-என்ட்ரி கொடுக்க வைக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.
பிரதீபுக்கு ஆதரவாக ரசிகர்கள் மட்டும் இன்றி, முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள், பிரபலங்கள் என பலர் தங்களின் கருத்தை தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது கமல்ஹாசன் நடிகையுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, பெண் பாதுகாப்பு குறித்து பேசும் நீங்கள் முதலில் ஜிப் போடுங்கள் என வறுத்தெடுத்து வருகிறார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதாவது கமல்ஹாசன் பிறந்தநாள் அன்று, பிந்து மாதவி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலானது. இதில் கமல்ஹாசன் பேன்ட் ஜிப் போடாமல் இருப்பது போல் இருப்பதாக பிரதீப்பின் ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.