Arthika:கார்த்திகை தீபம் சீரியல் நடிகை ஹர்த்திகாவுக்கு நடந்து முடிந்தது திருமணம்! வெட்டிங் போட்டோஸ்!
கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வரும் நடிகை ஹர்த்திகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது இவருக்கு மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை அவரே வெளியிட, ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'செம்பருத்தி' சீரியல் மூலம் பிரபலமான கார்த்திக் ராஜ், திடீர் என அந்த சீரியலில் இருந்து சில கருத்து வேறுபாடு காரணமாக விலகிய நிலையில், இதை தொடர்ந்து மீண்டும் ஜீ தொலைக்காட்சியில் 'கார்த்திகை தீபம்' சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
இந்த சீரியலில் கார்த்திகேயா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடிக்க. கதாநாயகியாக தீபா என்ற கதாபாத்திரத்தில் ஹர்த்திகா நடிக்கிறார். அழகை விட, நல்ல மனமும், திறமையும் தான் முக்கியம் என்பதை நிரூபித்து, எப்படி நாயகனுடன் தீபா சேர்ந்து வாழ போகிறார் என்பதே இந்த சீரியலின் கதைக்களம்.
விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு, ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஜீ தமிழில் TRP லிஸ்டில் முதலிடம் பிடித்து வரும் இந்த சீரியல் நாயகியாக நடித்து வரும் ஹர்த்திகாவுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் எப்போது திருமணம், மாப்பிள்ளை யார்? என்கிற எந்த தகவலும் வெளியாகாத நிலையில், சற்றுமுன் தன்னுடைய திருமண புகைப்படத்தை வெளியிட்டு திருமணம் ஆன தகவலை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை ஹர்த்திகா.
பிரபல இயக்குனர் சுசி கணேசன் குடும்பத்தில் நேர்ந்த அதிர்ச்சி மரணம்!
இவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் இவரின் திருமணம் அவரின் குடும்ப வழக்கப்படி நடந்து முடிந்துள்ளது. தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நீல நிற பட்டு புடவையில், கழுத்தில் தாமரை மாலை, மற்றும் தாலியுடன் தன்னுடைய கணவருடன் போஸ் கொடுத்துள்ளார் ஹர்த்திகா. இவரின் கணவர் பட்டு வேஷ்டி சட்டையில் படு ஜோராக உள்ளார். இது நடிகை ஹர்த்திகாவுக்கு காதல் திருமணமாம்.
Ponni: விஜய் டிவி சீரியலில் இருந்து அதிரடியாக வெளியேறிய பிரபல நடிகை! இனி அவருக்கு பதில் இவர் தான்!
ஹர்த்திகா எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் திரை உலகில் அறிமுகமாகி, தமிழ், மலையாளம் போன்ற மொழி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D