Bigg Boss: இந்த திமிரே உன்ன அழிக்க போகுது! உண்மையை கூறிய அர்ச்சனா - விசித்ரா! ஜோவிகாவின் கேவலமான ரியாக்ஷன்!
பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா தன்னுடைய விளையாட்டை தவறாக விளையாடி வருகிறார் என, அர்ச்சனா மற்றும் விசித்ரா கூறியும், மிகவும் திமிராக ஜோவிகா நடந்து கொண்ட ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் புதிதாக வயல் கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்ததில் இருந்தே, மற்ற போட்டியாளர்கள் அவர்கள் மீது, காரணமே இன்றி தங்களின் வெறுப்பையும் கோவத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இன்றைய தினம், பிக்பாஸ் வீட்டுக்கும், ஸ்மால் பாஸ் வீட்டுக்கும் இடையே பெரிய பிரச்னையை வெடிக்கவைக்கும் விதமாக டாஸ்க் ஒன்றையும் கொடுத்து, செம்மையான சகுனி வேலையை பார்த்துள்ளார் பிக்பாஸ் . கடந்த ஒரு வாரத்தில், பிக்பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் கோவத்தில் பேசிய வார்த்தைகளை, குறும்படமாக போட்டு, யார் அதை கூறினார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் என பெயரையும் கூறினார்.
Ponni: விஜய் டிவி சீரியலில் இருந்து அதிரடியாக வெளியேறிய பிரபல நடிகை! இனி அவருக்கு பதில் இவர் தான்!
முதல் புரோமோவில், பாடி ஷம்மிங் செய்ததற்காக நிக்சன் சிக்கிய நிலையில், மற்ற போட்டியாளர்கள் அவரை கேவலமாக பார்த்ததை பார்க்க முடிந்தது. மேலும் நெட்டிசன்கள் பலர், இதற்க்கு பிரதீப் எவ்வளவோ பரவா இல்ல, கோவத்துல அசிங்கசிங்கமா ஆம்பளைங்கள திட்டுனாலும் பெண்கள் பற்றி இப்படி விமர்சித்தது இல்லை என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து ஜோவிகா தினேஷை ஆம்பளையா என கேட்டது, பூர்ணிமா அர்ச்சனாவை வேலை காரி என பேசியது, மற்றும் மாயா ப்ராவோவை பற்றி மிகவும் கீழ்த்தனமாக பேசியது என அனைவரையுமே வச்சு செய்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதைத்தொடர்ந்து வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில், ஜோவிகா இப்படி நடந்து கொண்டால் அவளின் எதிர்காலம் வீணாகிடும் என அர்ச்சனா புலம்பிய வார்த்தைகளும், ஜோவிகாவை மாயா, பூர்ணிமா, ஐஷு ஆகியோர் ஏத்தி விடுவதாக கூறிய வார்த்தைகளும் இடம்பெற்றது. இதற்க்கு விசித்ரா ஓப்பனாகவே உண்மையை சொன்ன போதிலும், ஜோவிகா மீண்டும் தலைக்கனத்தோடு நடந்து கொள்வதை பார்க்கமுடிகிறது.
கடந்த வாரம் , நீதி தவறி நடந்து கொண்ட ஆண்டவர்... இந்த வாரம் மீண்டும் நீதியை நிலைக்க வைக்க, பிரதீப்புக்கு ஆதரவாக பேசுவாரா? அல்லது முழுக்க முழுக்க தன்னுடைய அரசியல் நோக்கத்திற்காக, பிக்பாஸ் கேங்குக்கு சப்போர்ட் செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிரபல இயக்குனர் சுசி கணேசன் குடும்பத்தில் நேர்ந்த அதிர்ச்சி மரணம்!