MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திரிஷா, நயன்தாராலாம் ஓரம்போங்க... இனி சம்பள விஷயத்தில் ராஷ்மிகா தான் டாப்பு - ஒரு படத்துக்கு இத்தனை கோடியா?

திரிஷா, நயன்தாராலாம் ஓரம்போங்க... இனி சம்பள விஷயத்தில் ராஷ்மிகா தான் டாப்பு - ஒரு படத்துக்கு இத்தனை கோடியா?

பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, திரிஷா மற்றும் நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கி வருகிறராம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 14 2024, 07:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
rashmika

rashmika

கன்னட நடிகையான ராஷ்மிகா, கிரிக் பார்ட்டி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே ஹிட்டானதை தொடர்ந்து அவருக்கு தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்ட ராஷ்மிகா, டோலிவுட்டில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து குறுகிய காலத்தில் டாப் ஹீரோயினாக உயர்ந்தார். தன்னுடைய துறுதுறு நடிப்பால் இளசுகளை கவர்ந்திழுத்த ராஷ்மிகாவுக்கு நேஷனல் கிரஷ் பட்டமும் கிடைத்தது.

24
rashmika mandanna

rashmika mandanna

பின்னர் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த ராஷ்மிகா, முதல் படத்தில் நடிகர் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அதற்கு அடுத்த படத்திலேயே தளபதி விஜய்யுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் விஜய்க்கு ஜோடியாக நடித்தாலே போதும் என்று வாரிசு படத்தில் நடித்தார் ராஷ்மிகா. தற்போது தமிழில் நடிகை ராஷ்மிகா கதையின் நாயகியாக நடிக்கும் ரெயின்போ திரைப்படம் உருவாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Arjun : மகளின் திருமணம்.. மருமகனுக்கு குடைபிடித்த ஆக்ஷன் கிங்.. மனமுருகி வெளியிட்ட பதிவு - வீடியோ வைரல்!

34
Rashmika Mandanna Salary

Rashmika Mandanna Salary

இதுதவிர பாலிவுட்டிலும் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார் ராஷ்மிகா. அங்கு கடைசியாக ராஷ்மிகா நடிப்பில் வெளிவந்த அனிமல் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதை தொடர்ந்து அவருக்கு மவுசு அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் ஜோடியாக சிக்கந்தர் என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி உள்ளார் ராஷ்மிகா மந்தனா. இப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார்.

44
rashmika, Trisha, Nayanthara

rashmika, Trisha, Nayanthara

இந்நிலையில், சிக்கந்தர் படத்துக்காக நடிகை ராஷ்மிகா வாங்கி இருக்கும் சம்பள விவரம் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிக்க ராஷ்மிகா ரூ.15 கோடி சம்பளம் கேட்டாராம். அதன்பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் ரூ.13 கோடி அவருக்கு வழங்க தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் சம்பள விஷயத்தில் நடிகைகள் திரிஷா, நயன்தாராவை ஓரம்கட்டி இருக்கிறார் ராஷ்மிகா. திரிஷாவும், நயன்தாராவும் ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 'பருத்திவீரன்' படத்தில் சித்தப்பு சரவணன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
ராஷ்மிகா மந்தனா
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved