கள்ளக்குறிச்சி; விஷ சாராயத்தால் பறிபோன பல உயிர்கள்! திருக்குறளை மேற்கோள்காட்டி ஆவேச அறிக்கை வெளியிட்ட விஷால்!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 70-தீர்க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் விஷால் ஆவேசமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

Vishal statement against Kallakurichi poisoned liquor incident mma

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில், இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கள்ளச்சாராய விற்பனைக்காக பலமுறை சிறைச் சென்ற குற்றவாளி ஒருவர் சட்டவிரோதமாக விற்பனை செய்த இந்த விஷச்சாராயத்தை குடித்தே இந்த சோகம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் கள்ளச்சாராய விற்பனைக் கும்பல் மீதான காவல்துறை நடவடிக்கை எடுக்காதது  குறித்து கேள்வி எழுந்துள்ளது.

காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளின் துணையுடன் தான் இதுபோன்ற சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருகின்றது என கூறப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த அதிகாரிகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Vishal statement against Kallakurichi poisoned liquor incident mma

இரண்டாவது குழந்தையால் குடும்பத்தில் கூடிய சந்தோஷம்! சீரியல் நடிகை ஸ்ரீதேவி பகிர்ந்த குட் வைப் போட்டோஸ்!

இது ஒருபுறம் இருக்க, இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கும் நோக்கத்தில்... பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் அடுத்தடுத்து தங்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகர் விஷால் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, "கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில்  விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் விஷச் சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும் போதை பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர் கதையாகவே உள்ளது.

Vishal statement against Kallakurichi poisoned liquor incident mma

Ethirneechal: எதிர்நீச்சல் முடிவுக்கு சன் டிவி போட்ட இந்த கண்டிஷன் தான் காரணம்? உண்மையை உடைத்த அப்பத்தா!

சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும் இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

"கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்." 

என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க தமிழ்நாடு அரசு விஷச் சாரயத்தை ஒழிக்கவும், சமீப நாட்களாக தமிழகத்தில் புழங்கும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட செயல் திட்டம் வகுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வாயிலாக தமிழக மக்களின் ஒருவனாக தமிழ்நாடு அரசிற்கு சமர்பிக்கிறேன். உங்களில் ஒருவன் விஷால் என தெரிவித்துள்ளார்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios