Ethirneechal: எதிர்நீச்சல் முடிவுக்கு சன் டிவி போட்ட இந்த கண்டிஷன் தான் காரணம்? உண்மையை உடைத்த அப்பத்தா!
சன் டிவி-யில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த 'எதிர்நீச்சல்' தொடர் யாரும் எதிர்பாராத நேரத்தில் சட்டென முடிவுக்கு வர காரணம், என்ன என்பது பற்றி தற்போது இந்த சீரியலில் அப்பத்தான் கதாபாத்திரத்தில் நடித்துவந்த பாம்பே ஞானம் கூறியுள்ளார்.
ethirneechal
'கோலங்கள்' சீரியல் புகழ் இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில், 2022 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சீரியல்தான் எதிர்நீச்சல். உண்மை சம்பவத்தை புனையப்பட்ட கதையாக, பல்வேறு திருப்பங்களுடன் இந்த சீரியலை பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும், பஞ்சமில்லாமல் இயக்கி வந்தார் திருச்செல்வம். இந்த சீரியல் துவங்கிய இரண்டே வாரத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, டிஆர்பி ரேட்டிங்கிலும் டாப் 3 பட்டியலுக்குள் நுழைந்தது.
ethirneechal
இந்த சீரியல் ஆணாதிக்கம் கொண்ட ஒருவரின் பிடியில் இருந்து பெண்கள் வெளியே வர மேற்கொள்ளும் போராட்டங்களையும், சவால்களையும் அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு எதிராக சில விமர்சனங்கள் எழுந்த போதிலும் பின்னர் பலரது ஃபேவரட் சீரியலாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.
'எதிர்நீச்சல்' சீரியலின் நாயகி ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் மதுமிதா என்றாலும், இந்த சீரியலின் மிகப்பெரிய ஆணி வேராகவும், தூணாகவும் பார்க்கப்பட்டவர் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து தான். எதிர்மறை கதாபாத்திரத்தை இவர் ஏற்று நடித்து வந்தாலும், இவரை ரசிகர்கள் ஹீரோவை போல் கொண்டாடினார்கள். சீரியல்களில் வரும் வில்லனை கூட ரசிகர்கள் நேசிப்பார்கள் என்பதற்கு உதாரணமாகவும் பார்க்கப்பட்டார். இவர் சீரியலில் பேசும் பல டயலாக்குகள் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கண்டெண்ட்டாகவும் மாறியது.
Actor Marimuthu
இந்நிலையில் கடந்த ஆண்டு எதிர்நீச்சல் சீரியலின் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, மாரிமுத்துவுக்கு திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு அவரின் உயிரை காவு வாங்கியது. தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்து அவரே மருத்துவமனைக்கு அவசர அவசரமாக காரை ஓட்டிக்கொண்டு சென்று சென்ற போதும், சிகிச்சை அளிப்பதற்கு முன்பே உயிரிழந்தார்.
Ethirneechal
இவரது இழப்பு இந்த சீரியலின் ரேட்டிங் மற்றும் விறுவிறுப்பை அதிகம் பாதித்தது. மேலும் பல ரசிகர்கள் மாரிமுத்து இல்லாமல் இந்த சீரியலை பார்க்க முடியவில்லை என ஓப்பனாகவே கூறினார். மேலும் ஜூன் 8-ஆம் தேதி 'எதிர்நீச்சல்' தொடர் மொத்தமாக முடிவடைந்துள்ள நிலையில், இதற்கான காரணம் குறித்து முதல் முறையாக இந்த சீரியலில் அப்பத்தா கதாபாத்திரத்தில் நடித்து வந்த பாம்பே ஞானம் கூறியுள்ளார்.
இது குறித்து அண்மையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள இவர், இந்த தொடர் துவங்கும் போதே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக குணசேகரன் கதாபாத்திரமாகவே மாரிமுத்துவை ரசிகர்கள் பார்த்தனர். மாரிமுத்துவின் இறப்புக்கு பின்னர் சீரியல்களில் ஒரு சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியமாகி போனது. இதன் பின்னரே வேலா ராமமூர்த்தி இந்த சீரியலுக்குள் குணசேகரன் ஆக வந்தார். ஆரம்பத்தில் இவரை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள தயங்கினாலும், பின்னர் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் மிக குறுகிய காலத்திலேயே இந்த சீரியல் முடிவடைந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் கடந்த சில மாதங்களாக சீரியலில் ஏற்பட்ட மாற்றமும், அதனால் ஏற்பட்ட TRP சரிவும் தான். இதன் காரணமாக சேனல் தரப்பு இயக்குனரிடம் சீரியலை வேறு நேரத்திற்கு மாற்றிக்கொள்ள சொன்னார்கள். ஆனால் இயக்குனர் திருச்செல்வத்துக்கு அது ஏற்றதாக இல்லை. இதனால் பல்வேறு பிரச்சனைகள் வரும் என நினைத்த அவர், சீரியலை முடித்துக் கொள்ளலாம் என சட்டுனு முடிவு செய்துவிட்டார். சீரியல் முடிவுக்கு வருகிறது என அவர் அறிவித்த நாளிலிருந்து, ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவருமே சோகமாகவும்... கண்களில் கண்ணீருடன் தான் காணப்பட்டனர் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் எதிர்நீச்சல் தொடர் முடிவடைந்ததன் பின்னணி தெரியவந்துள்ளது.