- Home
- Gallery
- 80 வயதிலும் ஃபிட்னஸில் கலக்கும் விஜயகுமார்! அப்பாவின் வெறித்தன ஒர்க்கவுட்டை வெளிப்படுத்திய மகள் அனிதா!
80 வயதிலும் ஃபிட்னஸில் கலக்கும் விஜயகுமார்! அப்பாவின் வெறித்தன ஒர்க்கவுட்டை வெளிப்படுத்திய மகள் அனிதா!
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா, தன்னுடைய தந்தை மற்றும் குடும்பத்தினருடன் லண்டன் சென்றுள்ள நிலையில், அங்கு எடுக்கப்பட்ட தன்னுடைய அப்பாவின் ஃபிட்னஸ் வீடியோவை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

80 வயதிலும் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் விதத்தில் படு ஃபிட்னஸாக இருக்கும் பழம்பெரும் நடிகர் விஜயகுமார், ஒரு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தன்னுடைய கெரியரை துவங்கியவர். 1961 ஆம் ஆண்டு, இயக்குனர் டி ஆர் ரமணா இயக்கிய 'ஸ்ரீவள்ளி' என்னும் படத்தில் குழந்தை முருகனாக நடித்தார். பின்னர் மகாவீர பீமன், தாயே உனக்காக, போன்ற திரைப்படங்களில் நடித்த இவர் 1973 ஆம் ஆண்டு 'பொண்ணுக்கு தங்க மனசு' படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார்.
இதைத்தொடர்ந்து சமர்ப்பணம், மாணிக்கத் தொட்டில், அவள் ஒரு தொடர்கதை, முருகன் காட்டிய வழி, என ஒரு வருடத்திற்கு மட்டும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து பிரபலமானார். அழகும் - திறமையும் இருந்தும் இவரால் ஏனோ தமிழ் சினிமாவில் நிலையான ஹீரோ என்ற இடத்தை பிடிக்க முடியாமல் போனது. மாறாக பல படங்களில் வலுவான குணச்சித்திர கதாபாத்திரங்களே கிடைத்தன. எம்ஜிஆர் - சிவாஜியில் தொடங்கி, ரஜினி - கமல், விஜய் - அஜித் என மூன்று தலைமுறை ஹீரோக்களுடனும் நடித்த பெருமைக்குரியர் விஜயகுமார்.
சமீப காலமாக தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை குறைத்து கொண்டுள்ள விஜயகுமார், அவ்வப்போது சில சீரியல்களில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் விஜயகுமார் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் பேரன், பேத்திகளுடன் நேரம் செலவிடுவதை அதிகம் விரும்புகிறார்.
விஜயகுமார் நடிக்க வந்த ஆரம்ப கால கட்டத்திலேயே தன்னுடைய உறவினர் பெண்ணான முத்துக்கண்ணு என்பவரை 1969 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் பிரபல நடிகை மஞ்சுளாவை காதலிக்க துவங்கினார். இந்த காதலுக்கு முத்துக்கண்ணுவே சம்மதம் தெரிவித்த நிலையில், அவரே முன்னேறு மஞ்சுளாவை தன்னுடைய கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்தார். விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு மூலம் கவிதா, அனிதா, அருண் விஜய் என மூன்று பிள்ளைகளும்.. மஞ்சுளா மூலம் வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி என மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
நடிகை மஞ்சுளா தீவிர குடிப்பழக்கத்திற்கு ஆளாகி... மஞ்சள் காமாலை ரத்தத்தில் கலந்து விட்டதால் கடந்து 2013-ஆம் ஆண்டு உயிரிழந்தார். எனினும் விஜயகுமாரின் இரண்டாம் தாரத்து பிள்ளைகளாக ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவியை பார்க்காமல் தன்னுடைய மகள் போலவே முத்துக்கண்ணு பார்க்கிறார்.ஆனால் ஏனோ வனிதா விஜயகுமார் மட்டும் இவர்களின் குடும்பத்தில் ஒட்டியதே இல்ல. குடும்ப பிரச்சனை காரணமாக வனிதா விஜயகுமார் குடும்பத்துடன் எந்த ஓட்டும் உறவும் இன்றி தனித்து வாழ்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அனிதா விஜயகுமார் மகள் தியாவின் திருமண வரவேற்பு லண்டலின் கடந்த வாரம் நடந்த நிலையில், இதில் கலந்து கொள்ள ஒட்டு மொத்த விஜயகுமாரின் குடும்பமே அங்கு சென்றுள்ளது. லண்டன் சென்ற போது, அங்குள்ள பூங்காவில் தன்னுடைய தந்தை வெறித்தமனாக ஒர்க்கவுட் செய்த வீடீயோவை தான் அனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ளார்.
இதற்க்கு கேப்ஷனாக "வயசு என்பது வெறும் நம்பர் தான். என்னுடைய அப்பா எப்போதுமே அனைவருக்கும் ஒரு மோட்டிவேட்டர். அவரை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம். இந்த வயதிலும் மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், இருக்கிறார். இவர் தான் சிறந்த கேப்டனுக்கான எடுத்துக்காட்டு என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ மற்றும் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.