மும்பை பயங்கரவாதத் தாக்குதலை ஆதரித்துப் பேசிய கேரளப் பெண்! மன்னிப்பு கேட்கச் சொல்லும் நெட்டிசன்கள்!
ஷாருக் கான், சல்மான் கானுடன் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு தராததால் மும்பை மோசமாக உள்ளது என்று ஜிம்மி பேசியிருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
ஆகேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆஷ்லின் ஜிம்மி, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானால் நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அவர் ஷாருக் கான் மற்றும் சல்மான் கானுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால், மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை நியாயப்படுத்திப் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகியோருடன் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற தனது கனவை அடைய முடியாமல் போன விரக்தியில் இவ்வாறு பேசி வீடியோ வெளியிட்டார் என்று கூறப்படுகிறது.
கமுக்கமா இந்தியாவை விட்டு வெளியேறும் கோடீஸ்வரர்கள்! எல்லாரும் போற நாடு எதுன்னு தெரியுமா?
தனக்கு ஷாருக் கான், சல்மான் கானுடன் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு தராததால் மும்பை மோசமாக உள்ளது என்று அவர் பேசியிருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
ஆஷ்லின் ஜிம்மியின் இந்தப் பேச்சு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேட்டியை பார்த்த பலர், அவரைக் கடுமையான விமர்சித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற மூர்க்கத்தனமான பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் நெட்டிசன்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இன்னும் உறுதிசெய்யப்பட்ட தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.