Asianet News TamilAsianet News Tamil

Arjun : மகளின் திருமணம்.. மருமகனுக்கு குடைபிடித்த ஆக்ஷன் கிங்.. மனமுருகி வெளியிட்ட பதிவு - வீடியோ வைரல்!

Action King Arjun : பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் அர்ஜுன் அவர்களின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் அவர்களின் திருமணம் வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

Action King Arjun Emotional Statement on his daughter aishwarya arjun marriage with umapathy ramaiah ans
Author
First Published Jun 13, 2024, 11:58 PM IST

சுதந்திர தினம் என்றாலே நமது நினைவில் முதலில் வரும் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் தான். கடந்த 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி மதுகிரி என்கின்ற ஊரில் இவர் பிறந்தார். இது கர்நாடக மாநிலத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1980களின் துவக்கத்திலேயே இவர் நடிகராக களம் இறங்கினார். 

ஆரம்ப காலத்தில் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர், கடந்த 1984ம் ஆண்டு தமிழில் வெளியான "நன்றி" என்கின்ற திரைப்படம் மூலம் தனது கோலிவுட் பயணத்தை தொடங்கினார். கடந்த 43 ஆண்டுகளாக கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என்று பல மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வரும் அர்ஜுன் அவர்களுடைய நடிப்பில் இறுதியாக கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜன் லியோ திரைப்படம் வெளியானது. 

'பருத்திவீரன்' படத்தில் சித்தப்பு சரவணன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?

அதுமட்டுமல்லாமல் தற்பொழுது மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இவர் நான்கிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தல அஜித்தின் "விடாமுயற்சி" திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க கமிட்டாகி வருகின்றார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arjun Sarja (@arjunsarjaa)

இந்நிலையில் அவருடைய மூத்த மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கடந்த ஜூன் மாதம் பத்தாம் தேதி திருமணம் நடந்து முடிந்தது. பிரபல மூத்த நடிகர் தம்பி ராமையா அவர்களின் மகன் உமாபதி இராமையாவை ஐஸ்வர்யா மனம் முடித்தார். இப்பொது தனது மகளின் திருமண வைபக நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக கடவுளின் ஆசையோடு நடந்து முடிந்ததை மகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்திருக்கும் ஆக்சன் கிங் அர்ஜுன், திருமணம் குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டு தனது அன்பை பகிர்ந்துள்ளார்.

கமல்ஹாசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டிஜிட்டல் வெர்ஷனில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் 'குணா' திரைப்படம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios