- Home
- Cinema
- தொலைக்காட்சி
- TRP ரேஸில் டாப் 10 இடங்களை தட்டிதூக்கிய தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
TRP ரேஸில் டாப் 10 இடங்களை தட்டிதூக்கிய தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
சன் டிவி, விஜய் டிவி சீரியல்களுடன் ஜீ தமிழ் சீரியல் ஒன்றும் டிஆர்பி ரேஸில் குதித்துள்ளது. 2026-ம் ஆண்டின் 7வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Top 10 Tamil Serial TRP Rating
சின்னத்திரையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சேனல்கள் என்றால் அது சன் டிவி மற்றும் விஜய் டிவி தான். அந்த சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதன் காரணமாகவே வாரத்தின் ஏழு நாட்களும் சீரியலை ஒளிபரப்பும் நிலைக்கு சேனல்கள் வந்துள்ளன. சின்னத்திரை சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தான் இதற்கு மக்கள் மத்தியில் எந்த அளவு வரவேற்பு இருக்கிறது என்பதை கணிக்க முடியும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு 7வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் வெளியாகி உள்ளது. அந்தப் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10. கார்த்திகை தீபம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திக் ராஜ் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் பத்தாவது இடத்திலேயே நீடிக்கிறது. அந்த சீரியலுக்கு இந்த வாரம் 5.25 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.
9. சின்ன மருமகள்
விஜய் டிவியில் நவீன் நடிப்பில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சின்ன மருமகள். இந்த சீரியல் கடந்த வாரம் 5.86 புள்ளிகள் உடன் ஒன்பதாம் இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரமும் அதே இடத்தை தக்க வைத்துள்ளதோடு 5.76 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது.
8. எதிர்நீச்சல் 2
சன் டிவியின் விறுவிறுப்பான தொடர்களில் ஒன்றான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் பின்னடைவை சந்தித்துள்ளது போன வாரம் 6.92 புள்ளிகள் உடன் ஏழாவது இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 6.49 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது.
7. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகிக்கிறது. கடந்த வாரத்தில் 6.43 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் 6.66 டிஆர்பி ரேட்டிங் பெற்று ஏழாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
6. அன்னம்
அபி நட்சத்திரா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அன்னம். இந்த சீரியல் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் 6வது இடத்திலேயே நீடித்தாலும் அதற்கான டி ஆர் பி ரேட்டிங் சரிவை சந்தித்துள்ளது. கடந்த வாரம் 7.56 டிஆர்பி ரேட்டிங் பெற்றிருந்த அன்னம் சீரியல் இந்த வாரம் வெறும் 6.88 புள்ளிகளை மட்டும் பெற்று உள்ளது.
5. சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் சக்கபோடு போட்டு வரும் சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை தான். திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் ஐந்தாவது இடத்தை தக்க வைத்துள்ளது. கடந்த வாரம் 7.91 டிஆர்பி புள்ளிகளை பெற்றெடுத்த இந்த சீரியல் இந்த வாரம் 7.50 புள்ளிகளை மட்டுமே பெற்று உள்ளது.
4. கயல் - மருமகள் மகா சங்கமம்
இரண்டு சீரியல்களை ஒன்றாக இணைத்து மகா சங்கமம் என்கிற பெயரில் நடத்துவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வரிசையில் சன் டிவியின் கயல் மற்றும் மருமகள் சீரியல்கள் தற்போது மகா சங்கமும் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கு இந்த வாரம் 7.66 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளது. இந்த மகா சங்கமும் டிஆர்பி ரேசில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
3. சிங்கப்பெண்ணே
சன் டிவியில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்த சிங்க பெண்ணே சீரியல் தற்போது சொதப்பலான திரைக்கதை காரணமாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அந்த சீரியல் கடந்த சில வாரங்களாக மூன்றாவது இடத்திலேயே நீடிக்கிறது. இந்த வாரமும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள சிங்க பெண்ணே சீரியலுக்கு 8.09 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.
2. அய்யனார் துணை
விஜய் டிவியில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள சீரியல் என்றால் அது அய்யனார் துணை சீரியல்தான். எதிர்நீச்சல் தொடரின் நாயகியாக இருந்த மதுமிதா அய்யனார் துணை சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த சீரியல் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளது. இதற்கு 8.32 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன.
1. மூன்று முடிச்சு
வழக்கம்போல் சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் தான் இந்த வாரமும் முதலிடத்தில் உள்ளது. சுவாதி கொண்டே நாயகியாக நடித்து வரும் இந்த சீரியல் கடந்த வாரம் 9.50 புள்ளிகளைப் பெற்று இந்த நிலையில் இந்த வாரம் சரிவை சந்தித்து வெறும் 9.05 புள்ளிகளை மட்டும் பெற்றுள்ளது. இனி வரும் வாரங்களில் அய்யனார் துணை சீரியல் இந்த மூன்று முடிச்சு சீரியலை முந்தி முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது

