இதுக்கு பிகினியே பரவால்ல போலயே... ராஷி கண்ணாவின் குண்டக்க மண்டக்க கவர்ச்சியால் கிளீன் போல்டான ரசிகர்கள்
திருச்சிற்றம்பலம் பட நடிகை ராஷி கண்ணாவின் படு கவர்ச்சியான போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. அப்படத்தின் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர், முதல் படத்திலேயே தன்னுடைய கியூட்டான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
இமைக்கா நொடிகள் படத்தின் வெற்றிக்கு பின்னர் ராஷி கண்ணாவுக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி விஷாலுக்கு ஜோடியாக அயோக்யா, ஜெயம் ரவி உடன் அடங்க மறு மற்றும் விஜய் சேதுபதி ஜோடியாக சங்கத்தமிழன் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
ராஷி கண்ணா நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த திரைப்படங்களான திருச்சிற்றம்பலம் மற்றும் சர்தார் ஆகிய இரண்டுமே பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தன. இதில் சர்தாரில் கார்த்திக்கு ஜோடியாகவும், திருச்சிற்றம்பலத்தில் தனுஷுடனும் நடித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... எகிப்து ராணி கெட் அப்பில் எக்ஸ்ட்ரா கவர்ச்சியை சேர்த்த ராஷி கண்ணா
இதையடுத்து பாலிவுட்டுக்கு சென்ற ராஷ்மிகா, அங்கு விஜய் சேதுபதி மற்றும் ஷாகித் கபூர் உடன் இணைந்து ஃபர்சி என்கிற வெப் தொடரில் நடித்தார். தற்போது இவர் கைவசம் மூன்று இந்தி படங்கள், மூன்று தமிழ் படங்கள் மற்றும் ஒரு தெலுங்கு படம் என அரை டஜன் படங்களுடன் பான் இந்தியா அளவில் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ராஷி கண்ணாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன. உள்ளாடை தெரியும்படி ஓவர் கோட் அணிந்து கவர்ச்சியில் அடுத்த லெவலுக்கு சென்றுள்ள ராஷி கண்ணா, அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காகவே இப்படி கிளாமரின் புகுந்து விளையாடுவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மாடர்ன் உடையில் டூமச் கிளாமர்... இணையத்தை கலக்கும் ராஷி கண்ணாவின் கவர்ச்சி புகைப்படங்கள்