மாடர்ன் உடையில் டூமச் கிளாமர்... இணையத்தை கலக்கும் ராஷி கண்ணாவின் கவர்ச்சி புகைப்படங்கள்
வெள்ளை நிற மாடர்ன் உடையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம்ம வைரலாகி வருகின்றன.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராஷி கண்ணா. இவர் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதையடுத்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அடுத்ததாக விஷாலுடன் அயோக்யா, ஜெயம் ரவியின் அடங்கமறு, விஜய் சேதுபதி உடன் சங்கத்தமிழன், ஆர்யாவுக்கு ஜோடியாக அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து அசத்தி இருந்தார்.
இந்த ஆண்டு இவர் நடிப்பில் தமிழில் திருச்சிற்றம்பலம் மற்றும் சர்தார் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தன.
இதையடுத்து தெலுங்கு, இந்தி, தமிழ் என பல்வேறு மொழிகளில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கி உள்ளதால் செம்ம குஷியில் இருக்கும் ராஷி கண்ணா, சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற மாடர்ன் உடையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.