MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அயலான், கேப்டன் மில்லரை விட டபுள் மடங்கு வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பாகுபலியாக மிரட்டும் ஹனுமன் பட வசூல் நிலவரம்

அயலான், கேப்டன் மில்லரை விட டபுள் மடங்கு வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பாகுபலியாக மிரட்டும் ஹனுமன் பட வசூல் நிலவரம்

பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வந்த சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட படமான ஹனுமன் பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 17 2024, 09:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Hanuman Movie

Hanuman Movie

தமிழில் பொங்கல் பண்டிகைக்கு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய் நடித்த மிஷன் சேப்டர் 1, விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் ஆகிய நான்கு திரைப்படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் ஆகின. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை போல் தெலுங்கு மாநிலங்களில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படும் இதனால் அங்கும் புதுப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Hanuman Box Office collection

Hanuman Box Office collection

அந்த வகையில் இந்த ஆண்டு சங்கராந்தி பண்டிகைக்கு தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம், வெங்கடேஷ், ஆர்யா நடித்த சைந்தவ், பிரசாந்த் வர்மா இயக்கிய ஹனுமன் மற்றும் நாகார்ஜுனா நடித்த நா சாமி ரங்கா ஆகிய நான்கு திரைப்படங்கள் திரைக்கு வந்தன. இந்த படங்களின் வசூலுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களின் தெலுங்கு பதிப்பை ரிலீஸ் செய்யவில்லை.

இதையும் படியுங்கள்... அடிச்சு தூக்கும் அயலான்... அடங்க மறுக்கும் கேப்டன் மில்லர் - வசூலில் வின்னர் யார்? 5 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

34
Hanuman cross 100 crore collection

Hanuman cross 100 crore collection

அயலான் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய இரு படங்களும் வருகிற ஜனவரி 26-ந் தேதி தான் தெலுங்கில் ரிலீஸ் ஆக உள்ளன. தமிழ்நாட்டில் இந்த இரு படங்கள் வசூல் வேட்டை நடத்துவதை போல் தெலுங்கில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் தான் வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படத்தையெல்லாம் அசால்டாக அடிச்சு தூக்கி சைலண்ட் வின்னராக உருவெடுத்துள்ளது பிரசாந்த் வர்மாவின் ஹனுமன் திரைப்படம்.

44
Hanuman Movie Box office record

Hanuman Movie Box office record

அயலான், கேப்டன் மில்லர் ஆகிய படங்கள் நான்கு நாட்களில் ரூ.50 கோடி வசூலை மட்டுமே எட்டி இருந்த நிலையில், ஹனுமன் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து பாக்ஸ் ஆபிஸில் பாகுபலியாக மிரட்டி வருகிறது. சூப்பர்ஹீரோ கதையம்சம் கொண்ட இப்படம் நேற்று மட்டும் இந்தியாவில் ரூ.9.21 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது. இதன்மூலம் உலகளவில் 5 நாட்களில் ரூ.110 கோடிக்கு மேல் வசூலை அள்ளி ரியல் பொங்கல் வின்னராக உருவெடுத்துள்ளது ஹனுமன். இப்படத்தில் தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இதையும் படியுங்கள்... காதலனை அறிமுகம் செய்த சாய் பல்லவியின் தங்கை.. விரைவில் திருமணம்?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved