MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அடிச்சு தூக்கும் அயலான்... அடங்க மறுக்கும் கேப்டன் மில்லர் - வசூலில் வின்னர் யார்? 5 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

அடிச்சு தூக்கும் அயலான்... அடங்க மறுக்கும் கேப்டன் மில்லர் - வசூலில் வின்னர் யார்? 5 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய திரைப்படங்களின் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 17 2024, 08:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ayalaan, captain miller

Ayalaan, captain miller

பொங்கல் பண்டிகைக்கு தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படமும், சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும் போட்டி போட்டு ரிலீஸ் ஆகின. இதில் கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார். அப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், நடிகர் சந்தீப் கிஷான், ஜான் கொக்கேன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Ayalaan Box Office

Ayalaan Box Office

மறுபுறம் இதற்கு போட்டியாக வெளிவந்த அயலான் திரைப்படத்தை ரவிக்குமார் இயக்கி இருந்தார். கேஜேஆர் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், பால சரவணன், யோகிபாபு, கருணாகரன் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருந்தது. இப்படம் சுமார் ஆறு ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் திரைக்கு வந்துள்ளது.

இதையும் படியுங்கள்... ஜல்லிக்கட்டையும்... வீரர்களையும் காப்பாற்ற இதை செய்யுங்கள்! தமிழக அரசுக்கு தங்கர் பச்சான் கோரிக்கை.!

34
Captain Miller Box Office

Captain Miller Box Office

இதில் கேப்டன் மில்லர் திரைப்படம் ஆக்‌ஷன் கதைக்களத்திலும், அயலான் சயின்ஸ் பிக்சன் பேண்டஸி கதைக்களத்திலும் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த இரண்டும் படங்களுக்கு சற்று கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், பேமிலி ஆடியன்ஸுக்கு படம் பிடித்துப்போனதால், இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு வருகின்றன. குறிப்பாக இரண்டு படங்களுமே நான்கு நாட்களில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.

44
Ayalaan vs captain miller day 5 box office collection

Ayalaan vs captain miller day 5 box office collection

இந்த நிலையில், இரண்டு படங்களின் ஐந்தாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் மாட்டுப்பொங்கல் தினமான நேற்று இந்தியாவில் மட்டும் ரூ.4.22 கோடி வசூலித்து இருந்தது. ஆனால் அயலான் படம் ரூ.6.07 கோடி வசூலை வாரிக்குவித்து கெத்து காட்டி இருக்கிறது. இதன்மூலம் பொங்கல் ரேஸில் அயலான் படம் படிப்படியாக முன்னேறி முதல் இடத்தை பிடித்து கேப்டன் மில்லரை பின்னுக்கு தள்ளி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... அர்ச்சனா பணம் கொடுத்து தான் பிக்பாஸ் கோப்பையை வாங்கினாரா? விஜய் டிவியை சர்ச்சையில் சிக்க வைத்த மாயா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்
பொங்கல்
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved