மாப்பிள்ளை வீட்டாருக்கு இலையில் இனிப்பு வைக்கவில்லை என்பதால் நின்றுபோன திருமணம்!
மணமகனின் நண்பர்களுக்கு இனிப்பு வழங்கவில்லை என்று குறைகூறி மணமகன் வீட்டார் சண்டைக்கு வந்தனர். இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
வரதட்சணை காரணமாக திருமணங்கள் நிறுத்தப்பட்ட அவலங்களைச் கடந் காலத்தில் அறிந்திருப்போம். சமீபகாலமாக உணவு, விருந்தோம்பல் போன்ற பிரச்னைகளால் திருமணங்கள் நின்று போகும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இப்போது ஒரு இனிப்பு கிடைக்காததால் திருமணம் முறிந்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் சோமவார்பேட்டையில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றுபோனதால் இரு வீட்டாரும் காவல் நிலையத்தில் புகார் அளித்து சண்டை போட்டனர்.
சோம்வார்பேட்டை ஹனகல் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சிவில் இன்ஜினியராகப் பணிபுரியும், தும்கூரைச் சேர்ந்த ஹர்ஷித் என்பவருக்கும் மே 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருமண மண்டபத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
சனிக்கிழமை இரவு, மெஹந்தி நிகழ்ச்சியுடன், சுபமுகூர்த்த நேரத்தில் நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டது. மணமகனின் குடும்பத்தினர் மாலை 4 மணியளவில் மண்டபத்தை அடைந்தனர். ஆனால் மணமகள் வீட்டார் தாமதமாக 7 மணிக்கு மேல் மண்டபத்துக்கு வந்துள்ளனர். இது மணமகன் குடும்பத்தினரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
செம டான்ஸ்... நானும் என்ஜாய் பண்றேன்! மம்தாவை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!
வந்தவுடன் மணமகன் மற்றும் மணப்பெண்ணின் குடும்பத்தினர் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, நிச்சயதார்த்தத்தின் போது மணமகனின் நண்பர்களுக்கு இனிப்பு வழங்கவில்லை என்று குறைகூறி மணமகன் வீட்டார் சண்டைக்கு வந்தனர். இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
கடைசியில் மணமகனின் குடும்பத்தினர் இந்த திருமணம் எங்களுக்கு வேண்டாம் என்று திருமணத்தை நிறுத்துவதாகக் கூறிவிட்டனர். இனிப்பு கிடைக்கவில்லை என்ற காரணத்தால் நடைபெற இருந்த திருமணம் 24 மணிநேரத்துக்கு முன்பாக நின்றுபோனது.
லட்சக்கணக்கான ரூபாய் செலவில் திருமண நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. திடீரென ரத்து செய்யப்பட்டால் பெண்ணின் கதி என்ன என்று பெண்ணின் குடும்பத்தினர் கேட்டனர். அப்போது மீண்டும் சண்டை மூண்டதால் இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றது.
திருமணம் நின்று போனதால், தங்கள் மானம் போய்விட்டது என்றும் கல்யாணத்துக்காக செலவு செய்த லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மணமகன் வீட்டாரிடம் இருந்து பெற்றுத் தருமாறும் மணமகளின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் மணமகன் வீட்டாரின் அரசியல் செல்வாக்கு காரணமாக காவல்துறையில் முறையாக புகாரைப் பெற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
ஆக்சிஜன் வால்வில் கோளாறு... சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளிப் பயணம் கடைசி நிமிடத்தில் ரத்து!