செம டான்ஸ்... நானும் என்ஜாய் பண்றேன்! மம்தாவை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!
பிரதமர் மோடி தன்னை வைத்து உருவாக்கிய ஸ்பூஃப் வீடியோவை தானே பகிர்ந்து, அதன் கிரியேட்டிவிட்டியை பாராட்டி இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தன்னை வைத்து உருவாக்கிய மீம் வீடியோவைப் பகிர்ந்து, நன்றாக இருப்பதாகப் பாராட்டி இருக்கிறார். மோடி ஒரு மேடையில் நடந்து வந்து நடனமாடுவது போன்ற அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, இதேபோல மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மம்தா பானர்ஜி அந்த வீடியோவைப் பகிர்ந்த பயனர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
ஆனால், பிரதமர் மோடி தன்னை வைத்து உருவாக்கிய ஸ்பூஃப் வீடியோவை தானே பகிர்ந்து, அதன் கிரியேட்டிவிட்டியை பாராட்டி இருக்கிறார். அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டர், "இந்த வீடியோவைப் பதிவிடுவதால் 'சர்வாதிகாரி' (மோடி) என்னை கைது செய்யப்போவதில்லை என்று எனக்குத் தெரியும்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.
7 ரூபாய் முதலீடு செய்தால் போதும்... முதுமையில் ரூ.5,000 பென்ஷன் கிடைக்க கேரண்டி!
இந்தப் பதிவை ரீட்வீட் செய்த மோடி, "உங்கள் அனைவரையும் போலவே நானும் நான் நடனமாடுவதைப் பார்த்து ரசித்தேன். தேர்தல் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது இதுபோன்ற படைப்பாற்றலின் வெளிப்பாடு உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ அமெரிக்க ராப் இசை பாடகர் லில் யாச்சியின் வீடியோவை வைத்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் எடிட் செய்து உருவாக்கப்பட்டுள்ளது. ஜூன் 21, 2022 அன்று யூடியூப்பில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், லில் யாச்சிக்குப் பதிலாக ஹிட்லர் முதலிய பிரபலமான நபர்களை வைத்து மீட் வீடியோவை உருவாக்குகின்றனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் இதேபோன்ற ஸ்பூஃப் வீடியோவை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த 2 பேர் மீது கொல்கத்தா காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தொடர்ந்து அதிகமாகப் பரவிவருகிறது.
சிம் கார்டு விதிகளில் மாற்றம்... ரெண்டு நம்பர் வைத்திருந்தால் ஆப்பு நிச்சயம்!