ஒருமையில் பேச்சு.. மேடை நாகரிகம் சுத்தமா இல்ல - புரட்சி தலைவரோடு ஒப்பிட்டு மிஷ்கினை வறுத்தெடுக்கும் Netizens!
பிரபல இயக்குனரும், நடிகருமான மிஷ்கின் அவர்கள், தளபதி விஜய் அவர்களை ஒருமையில் பேசியதாக கூறி, விஜயின் ரசிகர்கள் சிலர், சில தினங்களுக்கு முன்பு மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Mysskin and Vijay
இதற்கு பல்வேறு தரப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த அதே நேரத்தில், நெட்டிசன்கள் பலர், இயக்குனர் மிஷ்கின் மீதும் தவறுகள் உள்ளதாக கூறி மீம்ஸ்களை போட்டு வருகின்றனர். ஒருவர் எவ்வளவு பெரிய நடிகராக, இயக்குனராக அல்லது ஒரு கலைஞனாக இருந்தாலும், பொதுவெளியில் பேசும் பொழுது மேடை நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
Mysskin and Vishal
அண்மையில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற டைனோசர் என்ற திரைப்படத்தின் அறிமுக விழாவில் நடிகர் மிஷ்கின் பேசியிருந்தார், அப்பொழுது பல சர்ச்சையான கருத்துக்களையும், ஒருமையில் பலரை பேசியதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல பல இடங்களில் பெரிய நடிகர்களை அவன் இவன் என்று பேசுவதை இயல்பாகக் கொண்டவர் மிஷ்கின்.
Actor Mysskin
இந்நிலையில் எம்ஜிஆர் அவர்களைப் போல கண்ணாடி போட்டால் மட்டும் போதாது, புரட்சித் தலைவரை போல நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள், எந்த மேடையில் பேசினாலும், அது சிறுவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, அல்லது குழந்தைகளாக இருந்தாலும் சரி, மிகவும் மரியாதையோடு பேசக்கூடிய ஒரு நபராக திகழ்ந்து வந்தார்.
Actor and Director Mysskin
இன்றளவும் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் உள்ள பல முக்கிய நட்சத்திரங்கள் பொது வெளியில் பேசும் பொழுது மிகுந்த மரியாதையோடு பேசுவது இயல்பாக உள்ளது. ஆனால் இயக்குனர் மிஷ்கின் தொடர்ச்சியாக ஒருமையில் பேசி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.