Ninaithen Vanthaai: சுடரை காப்பாற்றிய எழில்! வேலுவுடன் ஏற்பட்ட மோதல் நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடரை வேலு மடக்கி பிடித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது வேலு சுடரை பிடித்து விட சுடர் செய்வதறியாது தவிக்க அவளை காப்பாற்ற வருகிறான் எழில். இதனால் எழிலுக்கும் வேலுவுக்கும் மோதல் உருவாகிறது. வேலு எழிலை தாக்க பதிலுக்கு எழில் வேலுவை அடித்து கீழே தள்ளுகிறான்.
நீ யாரா வேணால் இரு, ஆனால் தமிழ் என் வீட்டில் இருக்கும் வரை நான் தான் அவளுக்கு பாதுகாப்பு என்று சுடரை காப்பாற்றி வேலுவை போலீசில் பிடித்து கொடுக்கிறான். மனோகரி அங்கு வந்து யார் அவன் என்று கேட்க எழில் அவ பயந்து போய் இருக்கா, இப்போதைக்கு எதுவும் கேட்க வேண்டாம் என்று சொல்லி அழைத்து வருகிறான்.
சுடர் காரில் வரும் போது குற்ற உணர்ச்சியுடன் மன்னிப்பும் நன்றியும் சொல்லி கொண்டே வர எழில் எதுவும் பேசாமல் வருகிறான். பிறகு அப்பாவுக்கு போன் செய்து வேலு வந்த விஷயத்தையும் தன்னை எழில் காப்பாற்றிய விஷயத்தையும் சொல்கிறாள்.
எழில் சார் வீட்டில் இருக்கும் வரை நான் பாதுகாப்பு இருப்பேன் என்று சொல்ல அவர் நீ எங்கயும் போகாத, அந்த தம்பிக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியல என்று சொல்லி கண் கலங்குகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.