MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Can First Look: சன் டிவி பிரபலம் ஆடம்ஸ் இயக்கத்தில் பல முகம் சேர்ந்த ஒருமுகமாய் வெளியான 'கேன்' ஃபர்ஸ்ட் லுக்!

Can First Look: சன் டிவி பிரபலம் ஆடம்ஸ் இயக்கத்தில் பல முகம் சேர்ந்த ஒருமுகமாய் வெளியான 'கேன்' ஃபர்ஸ்ட் லுக்!

சன் டிவி தொலைக்காட்சியில், தொகுப்பாளராகவும், சீரியல் நடிகராகவும் பிரபலமான ஆடம்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கேன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Apr 02 2024, 07:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ஷோபனா கிரியேசன்ஸ் சார்பில், D. கருணாநிதி தயாரிப்பில், சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில், பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, இன்றைய தலைமுறையின் காதலைப் பெண்களின் பார்வையில் சொல்லும், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள  திரைப்படம்  “கேன் (can).” புதுமையான வடிவத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

சன் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி  மக்களின் மனதில் இடம் பிடித்த ஆடம்ஸ்,  திரைப்படங்களில் 4 வருடகாலம் உதவி இயக்குநர், இணை இயக்குநராக  பணியாற்றிய பிறகு, முதன்முறையாக இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.  

Shiva Rajkumar: என்ன ஆச்சு? கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அதிர்ச்சி!

37

இன்றைய தலைமுறை இளம்பெண்களின் வாழ்க்கை, அவர்களின் பார்வையிலான காதலை மையப்படுத்தி, நகைச்சுவையுடன் கூடிய அழுத்தமான, ஜனரஞ்சக திரைப்படமாக, இப்படத்தை உருவாக்கியுள்ளார் ஆடம்ஸ். 

47

படத்தின் கதாபாத்திரங்களைக் கலைத்துப் போட்டு, ஒரு புதிய முகத்தை உருவாக்கிக் காட்டியிருக்கும், நவீன வடிவிலான ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. புதுமையான முறையில் உருவாகியுள்ள  இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.

Pushpa 2 Teaser: அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' டீசர் ரெடி! ரிலீஸ் தேதி குறித்து வெளியான அறிவிப்பு!

57

இப்படத்தில் பிரணவி மனுகொண்டா, ஹேமந்த் மேனன், அக்ஷரா ராஜ்  முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க,  கலையரசன், யாஷிகா ஆனந்த், தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா, கருணாகரன், மாறன், ஸ்ரீமன், VTV கணேஷ், கௌசல்யா, ரெடின் கிங்ஸ்லி, நாஞ்சில் விஜயன், கார்த்திக் கருப்பு காளை, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

67

இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க, குளிர் பொங்கும் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறையை, திரையரங்கில் சொட்டச் சொட்ட காதலுடன்  ஜில்லென கொண்டாடும்படியாக இப்படம் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது படக்குழு.   

Indian 2 Release Date: 'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? சமூக வலைதளத்தில் தீயாய் பரவும் தகவல்!

77

இப்படத்தினை ஷோபனா கிரியேசன்ஸ் சார்பில் D.கருணாநிதி பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.  படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved