MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Indian 2 Release Date: 'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? சமூக வலைதளத்தில் தீயாய் பரவும் தகவல்!

Indian 2 Release Date: 'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? சமூக வலைதளத்தில் தீயாய் பரவும் தகவல்!

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Apr 02 2024, 03:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Indian 2

Indian 2

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல் ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 வருடங்களுக்கு பின், இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்தது.
 

25

இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக, இந்தியன் 3... அதாவது மூன்றாவது பாகத்தையும் இயக்குனர் சங்கர் இயக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. எனவே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை முடித்த கையேடு, மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.

சும்மா தாறு மாறா இருக்கே! ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வரும் 'படே மியன் சோட்டே மியன்' டிரைலர்!
 

35

இரண்டாம் பாகத்தின் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் துவங்கி, பல கட்டமாக நடைபெற உள்ளதால்... தேர்தல்  முடிந்ததும்  இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
 

45

அதன்படி மே 24ஆம் தேதி, 'இந்தியன் 2' படம் பான் இந்தியா படமாக, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. 

Comedy Actor Death: டேனியல் பாலாஜி மறைவை தொடர்ந்து மற்றொரு அதிர்ச்சி! பிரபல தமிழ் காமெடி நடிகர் மரணம்!
 

55

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் சித்தார்த். ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், சமுத்திரகனி, மனோபாலா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ள இப்படத்தை  லைக்கா மற்றும் ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Atlee Movie Heroine: த்ரிஷாவுக்கு No.. ஜவானில் மிஸ்ஸான நடிகையை அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக.. தட்டி தூக்கிய அட்லீ
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved