நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து முடித்துள்ள, 'புஷ்பா 2' படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. 

பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ள திரைப்படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் முதல் பாகம் கடந்து 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் இப்படம் பெற்று தந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சுமார் 500 கோடி வசூல் சாதனை செய்த 'புஷ்பா தி ரைஸ்' படத்தை தொடர்ந்து, இரண்டாவது பாகத்திலும் நடித்து முடித்துள்ளார் அல்லு அர்ஜுன். செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், புஷ்பராஜ் என்கிற கதாபாத்திரமாகவே மாறி அனைவரையும் வியக்க வைத்தார் அல்லு அர்ஜுன். இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க பகத் பாசில் வில்லனாக மிரட்டி இருந்தார். அதே போல் முதல் பாகத்தில் நடிகை சமந்தா ஆடிய 'ஊ சொல்றியா மாமா' ஐட்டம் டான்ஸ் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி, அதாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 'புஷ்பா தி ரூல்' என பேரிடப்பட்டுள்ள இப்படத்தின் அப்டேட் குறித்து, தொடர்ந்து அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது 'புஷ்பா 2' படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 8-ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மைத்ரேயி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…