புது வீட்டில் 2வது திருமண நாளை கொண்டாடிய விக்கி - நயன்... அதுவும் இந்த பிரபலங்கள் உடனா? வைரல் போட்டோஸ் இதோ
Nayanthara Vignesh Shivan 2nd wedding anniversary : நடிகை நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவன் உடன் சேர்ந்து 2வது திருமண நாளை தங்களது புது வீட்டில் வைத்து கொண்டாடி இருக்கிறார்.
Nayanthara Vignesh Shivan 2nd wedding anniversary
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு தற்போது வயது 40ஐ நெருங்கிவிட்டாலும் இன்னும் சினிமாவில் மவுசு குறையாத ஹீரோயினாக வலம் வருகிறார். தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா அளவில் பிசியான ஹீரோயினாக திகழ்ந்து வருகிறார் நயன்தாரா.
Nayanthara Vignesh Shivan 2nd wedding anniversary celebration
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் உள்ள பீச்சோர நட்சத்திர விடுதியில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
Nayanthara Vignesh Shivan 2nd wedding anniversary photos
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமணம் முடிந்த நான்கு மாதங்களிலேயே இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் வாடகைத் தாய் மூலம் இந்த குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். அந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் சிவன் என்றும் உலக் தெய்விக் சிவன் என்றும் பெயரிட்டு உள்ளனர்.
இதையும் படியுங்கள்... மாத சம்பளம் 60 லட்சம்; நடிகைகளைவிட அதிக சொத்துக்கு சொந்தக்காரியா இருக்கும் ஷாருக்கானின் மேனேஜர் பற்றி தெரியுமா
nelson at Nayanthara Vignesh Shivan 2nd wedding anniversary
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி தங்களது திருமண நாளை முன்னிட்டு சீனாவிற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், திருமண நாளன்று சென்னை திரும்பிவிட்டனர். ஏனெனில் அவர்கள் தங்கள் திருமண நாளை அண்மையில் குடியேறிய போயஸ் கார்டன் இல்லத்தில் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
Nayanthara Vignesh Shivan 2nd wedding anniversary images
விக்கி - நயன் ஜோடியின் திருமண நாள் கொண்டாட்டத்தில் இயக்குனர் நெல்சன், நடிகை கெளரி கிஷான் உள்பட சில நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் போட்டியை கண்டுகளித்தபடி திருமண நாளை கொண்டாடிய நயன் - விக்கி ஜோடியின் வெட்டிங் டே கிளிக்ஸை குவிஸ் மாஸ்டர் அபிஷேக் பரத்குமார் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... Rajini : "நண்பரே இதோ வரேன்".. நாளை பதவியேற்கும் சந்திரபாபு நாயுடு - மனைவியோடு விஜயவாடா பறந்த சூப்பர் ஸ்டார்!