மாத சம்பளம் 60 லட்சம்; நடிகைகளைவிட அதிக சொத்துக்கு சொந்தக்காரியா இருக்கும் ஷாருக்கானின் மேனேஜர் பற்றி தெரியுமா
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கானின் மேனேஜர் பூஜா தத்லானி பற்றியும் அவரின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றியும் பார்க்கலாம்.
Shah Rukh Khan Manager
பாலிவுட்டின் பாட்ஷாவாக வலம் வருபவர் ஷாருக்கான். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகமெங்கிலும் பேன்ஸ் அதிகம். இந்திய அளவில் பணக்கார நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் ஷாருக்கான். 6300 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் ஷாருக்கான் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்தாலும், கடந்தாண்டு பதான், ஜவான், டங்கி என ஹாட்ரிக் ஹிட் தந்து தரமான கம்பேக் கொடுத்தார்.
Shah Rukh Khan Manager Pooja Dadlani
ஷாருக்கான் சினிமா மட்டுமின்றி பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கிறார். அவருக்கு சொந்தமாக ரெட் சில்லிஸ் என்கிற தயாரிப்பு நிறுவனமும் உள்ளது. அதுதவிர ஐபிஎல், கரீபியன் பிரீமியர் லீக் என பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 தொடர்களில் ஷாருக்கானின் நைட் ரைடர்ஸ் அணியும் பங்கெடுத்து வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான் கோப்பையை வென்று அசத்தியது.
இதையும் படியுங்கள்... Nagma : நக்மாவிற்கு தொல்லைகொடுத்த VIPஸ்? சரத்குமாரிடம் அடைக்கலம் தேடினாரா? - புட்டு புட்டு வைத்த பிரபலம்!
Pooja Dadlani salary
இப்படி ஷாருக்கான் சினிமா மற்றும் பிசினஸில் சக்சஸ்புல்லாக இருப்பதற்கு அவரின் மேனேஜரும் ஒரு காரணம். ஷாருக்கான் ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் அவரின் பிசினஸ், தயாரிப்பு நிறுவனம், ஐபிஎல் டீம் நிர்வாகம் என அனைத்தையும் கவனித்து வருவது அவரின் மேனேஜரான பூஜா தத்லானி தான். கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஷாருக்கானிடம் மேனேஜராக பணியாற்றி வரும் பூஜா, இன்று ஹீரோயின்களுக்கு நிகராக சம்பாதித்து வருகிறார்.
Pooja Dadlani Net Worth
பூஜாவுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.60 லட்சம் சம்பளமாக வழங்கி வருகிறாராம் ஷாருக். இதன்மூலம் ஓராண்டுக்கு ரூ.7 முதல் ரூ.9 கோடி வரை சம்பாதித்து வருகிறார் பூஜா. கடந்த 2021 நிலவரப்படி பூஜா தத்லானியின் சொத்து மதிப்பு ரூ.45 முதல் ரூ.50 கோடியாக இருந்தது. தற்போது அது மேலும் அதிகரித்திருக்கக் கூடும். பல்வேறு சொகுசு கார்களையும் வைத்திருக்கும் பூஜா, கடந்த ஆண்டு மும்பையில் ஒரு விலையுயர்ந்த அபார்ட்மெண்ட்டில் குடியேறினார். அங்கு அவர் வாங்கிய பிளாட்டின் விலை ரூ.7.88 கோடியாம். பூஜா ஹிதேஷ் குரானி என்கிற இயக்குனரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ரெய்னா தத்லானி என்கிற மகளும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Sri Reddy : நான் அப்படி சொல்லல.. நிரூபியுங்கள், நான் நிர்வாணமாக பீச்சில் நடக்கிறேன் - சர்ச்சை நாயகி சவால்!