Asianet News TamilAsianet News Tamil

Nagma : நக்மாவிற்கு தொல்லைகொடுத்த VIPஸ்? சரத்குமாரிடம் அடைக்கலம் தேடினாரா? - புட்டு புட்டு வைத்த பிரபலம்!

Actress Nagma : வெளிமாநிலங்களில் இருந்து வரும் நாயகிகள் பலர், வெகு சில VIPகளால் டார்ச்சர்களுக்கு உள்ளதாக பிரபல சினிமா விமர்சகர் ஒருவர் கூறியுள்ளார்.

Jyothika elder sister Actress nagma tortured by VIP s and goondas veteran journalist open talk ans
Author
First Published Jun 12, 2024, 7:31 AM IST

வெளிமாநில நடிகைகள் 

தமிழ் சினிமா உலகத்தை பொறுத்தவரை, இங்கேயே பிறந்து வளர்ந்து, மிகப்பெரிய நடிகைகளாக மாறியவர்கள் என்றால், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு வெகு சிலர் மட்டுமே இருக்கின்றனர். தமிழ் திரைப்படங்களில், அந்த காலம் தொட்டே வெளிமாநில நடிகைகள் நான் அதிக அளவில் சாதனை படைத்திருக்கின்றனர். 

அதிலும் குறிப்பாக 80களின் இறுதியிலும் 90களின் முற்பகுதியிலும் தமிழ் திரை உலகில் அறிமுகமான வட இந்தியாவை சேர்ந்த பல நாயகிகள் இன்றும் சிறந்த நடிகைகளாக வளம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அப்படி வட மாநிலங்களில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வரும் நடிகைகளுக்கு, இங்குள்ள பெரும் புள்ளிகளாலும், தாதாக்களாலும் அவ்வப்போது பல வகையான தொந்தரவுகள் கொடுக்கப்பட்டு வந்ததாக சபிதா ஜோசப் கூறியுள்ளார். இவர் கலைமாமணி பட்டம் வென்ற ஒரு மூத்த பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Rajini : "நண்பரே இதோ வரேன்".. நாளை பதவியேற்கும் சந்திரபாபு நாயுடு - மனைவியோடு விஜயவாடா பறந்த சூப்பர் ஸ்டார்!

நடிகை நக்மா 

ஒரு தனியார் நிறுவனத்திற்கு சவிதா ஜோசப் அளித்த பேட்டி ஒன்றில், "வெளி மாநிலங்களில் இருந்து இங்கு நடிக்க வரும் நடிகைகளுக்கு முக்கிய புள்ளிகள் பலராலும், தாதாக்கள் சிலராலும் பல வகையான தொல்லைகள் கொடுக்கப்படும். அதிலிருந்து தப்பித்துக்கொள்ள பெரிய நடிகர் ஒருவருடைய துணையை இந்த நடிகைகள் தேடி வந்தது உண்மைதான்". 

Jyothika elder sister Actress nagma tortured by VIP s and goondas veteran journalist open talk ans

"குறிப்பாக ரோஜா கோலிவுட் உலகில் அறிமுகமான பொழுது, தான் செல்வமணியின் ஆள் என்று அவரே கூறிக் கொள்வார். குஷ்பூ இங்கு அறிமுகமான பொழுது பிரபுவுடன் நட்பினை ஏற்படுத்திக் கொண்டார். இப்படி ஒவ்வொரு நடிகைகளும் ஒரு பிரபல நடிகரோடு நட்பை ஏற்படுத்திக் கொண்டு தங்களுக்கு வரும் ஆபத்துகளில் இருந்து தப்பித்து வந்தனர்". 

"ஆனால் நடிகை நக்மாவை பொறுத்தவரை அவர் நேரடியாக எந்த நடிகரிடமும் உதவி கேட்டதில்லை. சரத்குமாருடன் அவர் இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அவர்களுக்கிடையே கிசுகிசுக்கள் ஏற்பட்டதே தவிர சரத்குமாரிடம் நட்புகொள்ள அவர் பெரிதாக முன்னெடுத்ததில்லை. காதலன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபுதேவா அவர்களும் நக்மாவை காதலித்து வந்தார். ஆனால் பதிலுக்கு அவர் காதலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது" என்று தனது பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

இப்பொது 50 வயதை தொடப்போகும் நடிகை நக்மா, பிரபல நடிகை ஜோதிகாவின் அக்கா என்பது அனைவரும் அறிந்ததே. சிட்டிசன் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் நடிக்காத நக்மா, 2008ம் ஆண்டு வரை போஜ்புரி மொழி படங்களில் நடித்து வந்தார். அதன் பின் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் கடந்த 2015ம் ஆண்டு முதல் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலராக செயல்பட்டு வருகின்றார். 

Sri Reddy : நான் அப்படி சொல்லல.. நிரூபியுங்கள், நான் நிர்வாணமாக பீச்சில் நடக்கிறேன் - சர்ச்சை நாயகி சவால்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios