- Home
- Gallery
- கார்த்திகை தீபம் சீரியல் : திடீரென துப்பாக்கியை எடுத்து சுட்ட ரியா... குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் அபிராமி
கார்த்திகை தீபம் சீரியல் : திடீரென துப்பாக்கியை எடுத்து சுட்ட ரியா... குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் அபிராமி
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆனந்துக்கு ரியா பற்றிய உண்மை தெரியவந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆனந்த்திடம் ரியா மதுவை மிரட்டியபோது எடுத்த வீடியோ ஆதாரத்தை காட்டிய கார்த்திக், அவளைப் பற்றிய உண்மையை உடைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Zee Tamil Karthigai deepam serial
அதாவது, ஆனந்திற்கு உண்மை தெரிந்த பிறகு ரியா கையில் துப்பாக்கியை எடுத்து கொண்டு எல்லாரையும் பாய்ண்ட் அவுட் செய்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறாள், உங்கள் எல்லாரையும் பத்தி எனக்கு தெரியும் என்று பேச தொடங்குகிறாள். பிறகு கார்த்தியை நோக்கி துப்பாக்கியை வைத்து என்னை ஏத்துக்கோங்க உங்களை உயிரோட விட்டுடுறேன் என்று மிரட்டுகிறாள்.
இதையும் படியுங்கள்... அண்ணா சீரியல் : இந்த முறை மிஸ் ஆகாது... புது பிளான் உடன் களமிறங்கும் செளந்தரபாண்டி; தேர்தலில் புது ட்விஸ்டா?
Karthigai deepam serial Update
இதனால் எல்லாரும் பதற்றம் அடைய, கார்த்திக் நீ செய்தது ரொம்ப பெரிய தப்பு, உன்னை எங்களால் ஏத்துக்க முடியாது என்று சொல்கிறான். என்னுடைய வாழ்க்கை இப்படி ஆக நீ தான் காரணம், அப்போ நீ தான் சாகனும்.. செத்து போ என்று சுட துணிகிறாள் ரியா. இந்த சமயத்தில் அபிராமி ஓடி வந்து கார்த்தியை காப்பாற்றி குண்டை தன் நெஞ்சில் வாங்கிக் கொள்கிறாள். அபிராமியின் உடம்பில் மூன்று குண்டுகள் பாய அனைவரும் ஷாக் ஆகின்றனர்.
Karthigai deepam serial Today Episode
ரத்த வெள்ளத்தில் கிடக்கும் அபிராமிக்கு என்ன ஆனது? அவரை கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் காப்பாற்றினார்களா? இல்லை ரியாவின் வேட்டைக்கு இறையானாரா அபிராமி? அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... முரட்டு சிங்கிளாக தனது 38வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை அஞ்சலி... அதுவும் இந்த நாட்டிலா? வைரலாகும் போட்டோஸ்