- Home
- Gallery
- ஓஹோ... சூப்பர் ஸ்டார் வீட்டு வாரிசை வளைத்து போட்டது இந்த நடிகை தானா? 10 கோடி நஷ்டஈடு கேட்பதால் பரபரப்பு!
ஓஹோ... சூப்பர் ஸ்டார் வீட்டு வாரிசை வளைத்து போட்டது இந்த நடிகை தானா? 10 கோடி நஷ்டஈடு கேட்பதால் பரபரப்பு!
சமீபத்தில் பிரபல சூப்பர் ஸ்டார் வீட்டு வாரிசான, யுவராஜ்குமார் தன்னுடைய மனைவி கொடுமை படுத்துவதாக விவாகரத்து கேட்ட போது, அவரின் மனைவி ஸ்ரீதேவி யுவராஜுக்கு நடிகையுடன் தொடர்பு உள்ளதாக கூறி இருந்தார். அந்த சம்பவத்தில் கிசுகிசுக்கப்பட்ட நடிகை யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

கன்னட திரை உலகில், மிகப்பெரிய ஆஸ்தி... அந்தஸ்துக்கு சொந்தக்காரர்களாக இருக்கும் ராஜ்குமார் வாரிசுகள் பெரிதாக எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் மிகவும் கவனமாகவே இருப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட குடும்பத்து வாரிசான நடிகர் யுவராஜ் குமார், காதலித்து திருமணம் செய்து கொண்ட தன்னுடைய மனைவி ஸ்ரீதேவி தன்னை கொடுமை படுத்துவதாக கூறி விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமணம் ஆகி நான்கே வருடங்கள் ஆகும் நிலையில், ஸ்ரீதேவி பைரப்பா சில மாதங்களிலேயே மேல் படிப்புக்காக வெளிநாடு சென்று விட்டார். இவர்கள் இணைந்து வாழ்ந்தது மிக குறைவான நாட்கள் மட்டுமே, எனவே இவர்களின் விவாகரத்து விஷயத்தில் வேறு ஏதாவது விஷயம் இருக்குமோ என்ற சந்தேகமும் ஒருபுறம் புகைந்து கொண்டிருந்த நிலையில் தான், ஸ்ரீதேவி பைரப்பா தன்னுடைய வழக்கறிஞர் மூலம் தன்னிலை விளக்கம் கொடுத்தார்.
'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கில் சூர்யாவை மிஞ்சினாரா அக்ஷய் குமார்? 'Sarfira' பட ட்ரைலர் இதோ!
Yuva Rajkumar Sridevi Byrappa
'தனக்கும் தன்னுடைய கணவருக்கும் நல்ல உறவு தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென உள்ளே வந்த நடிகை தான் இந்த விவாகரத்துக்கு காரணம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். வெளிநாட்டில் நான் படிக்கும் போது, தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் கணவர் நடிகையிடம் நெருக்கம் காட்டுவது குறித்து கூறியபோது.. அதனை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
Yuva Rajkumar Sridevi Byrappa
ஆனால் நான் விடுமுறைக்காக இந்தியா வந்த போது தான், இவர்களின் பழக்கம் குறித்து தெரியவந்தது. நான் இல்லாத போது அந்த இளம் நடிகையை பல முறை என் கணவர் வீட்டிற்கே அழைத்து வந்துள்ளார். ஓட்டல் அறையில் அவர்களை நான் கையும் களவுமாக பிடித்தேன் என்றும் கூறினார். இந்த விவகாரம் வெளியான போது, அந்த இளம் நடிகை யார் என்பது பலரது சந்தேகமாக இருந்த நிலையில், கிசுகிசுவில் சிக்கிய நடிகை தற்போது வாண்டடாக வாய்யை விட்டு சிக்கியுள்ளார்.
Sapthami Gowda
யுவராஜ் குமார், மனைவி ஸ்ரீதேவி வைரப்பா கூறியது நடிகை சப்தமி கௌடாவை தான் என்று தெரிய வந்துள்ளது. இவர் ஸ்ரீதேவி தன்னுடைய பெயரை கலங்க படுத்தியதாக கூறி ரூ.10 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தது மட்டும் இன்றி, தன்னிடம் கேட்டு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். ஒருபுறம் யுவா - ஸ்ரீதேவி விவாகரத்து வழக்கு நடந்து வர, விரைவில் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.