பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. மத்திய அரசின் இந்த அசத்தல் திட்டம் பற்றி தெரியுமா?
உத்யோகினி திட்டம் சிறு தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்குகிறது. இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பெண்களின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் ஒன்று உத்யோகினி திட்டம். இந்தத் திட்டம் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி வங்கிகளால் தொடங்கப்பட்ட திட்டமாகும். பெண்களுக்கான இந்தத் திட்டம் அரசு மற்றும் தனியார் வங்கிகளுடன் இணைந்து வங்கி சாரா நிதி நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பெண்கள் சுய தொழில் செய்வதற்கும், விவசாய நடவடிக்கைகளுக்கு கடன் பெறலாம்.
உத்யோகினி திட்டம் சிறு தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்குகிறது. இதன் மூலம் பெண்கள் ரூ.3 லட்சம் வரை கடன் பெற்று தொழில் தொடங்கலாம். ஊனமுற்ற பெண்கள் மற்றும் விதவைகளுக்கு கடன் வரம்பு இல்லை. பெண்கள் செய்ய உள்ள தொழில் மற்றும் அவர்களின் தகுதியைப் பொறுத்து, அவர்கள் அதிக கடன்களைப் பெறலாம்.
உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணத்தை டெபாசிட் செய்யலாம்? இந்த விதியை தெரிஞ்சுக்கோங்க!
உத்யோகினி திட்டத்தின் பலனைப் பெற விரும்பும் பெண்களின் வயது 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன் கிடைக்கும். இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாகும். இத்திட்டத்தின் கீழ், சொந்தமாக தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே தொழில் தொடங்கி நடத்தி வரும் பெண்களுக்கும் கடனுதவி வழங்கப்படுகிறது. உத்யோகினி திட்டம் என்பது பெண்கள் தொழில்முனைவோராகவும், தொழிலதிபர்களாகவும் உருவாகி அவர்கள் சொந்தக் காலில் நிற்க உதவும் திட்டமாகும். இத்திட்டம் மத்திய அரசு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் மேற்பார்வையில் நாடு முழுவதும் செயல்படுத்தியது. முக்கியமாக கிராமப்புறங்களில் உள்ள பெண்களின் பொருளாதார தன்னம்பிக்கைக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 48,000 பெண்கள் பயன்பெற்று சிறுதொழில் முனைவோராக சிறந்து விளங்குவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் தலித் பெண்களுக்கு முற்றிலும் வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. மற்ற பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் பெண் கடனைப் பெறும் வங்கியின் விதிமுறைகளைப் பொறுத்தது. மேலும், குடும்ப ஆண்டு வருமானத்தைப் பொறுத்து 30 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் (SC - ST) மற்றும் உடல் ஊனமுற்ற பெண்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது.
பெண் குழந்தைகளுக்கு ஏற்ற SSY.. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இவ்வளவு சலுகைகள் இருக்கா?
இந்தத் திட்டத்தின் கீழ், சொந்தத் தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இதனுடன், ஏற்கனவே தொழில் உள்ள பெண்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். இந்தத் திட்டம் அரசு, தனியார் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களால் (NBFCs) சுயாதீனமாக நடத்தப்படுகிறது.
பல அரசு மற்றும் தனியார் வங்கிகளில் தொழில்துறை கடன்கள் எளிதாக கிடைக்கின்றன. இது தவிர, உத்யோகினி திட்டத்தின் கீழ், அனைத்து வணிக வங்கிகள், அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (RRB) உத்யோகினி கடன் பெறலாம்.
உத்யோகினி திட்டம் - யார் தகுதியானவர்?
- 18 வயது முதல் 55 வயது வரை உள்ள அனைத்து பெண்களும் தகுதியானவர்கள்.
- இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் தங்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் CIBIL ஸ்கோர் நன்றாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- கடந்த காலத்தில் ஏதேனும் கடன் வாங்கி அதை முறையாக திருப்பிச் செலுத்தாமல் இருந்தால் கடன் வழங்கப்படாது.
உத்யோகினி திட்டம் : என்னென்ன ஆவணங்கள் தேவை
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களும் இணைக்கப்பட வேண்டும்
- விண்ணப்பிக்கும் பெண்ணின் ஆதார் அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ்
- வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ரேஷன் கார்டு நகலை இணைக்க வேண்டும்.
- வருமான சரிபார்ப்பு கடிதம்
- குடியிருப்பு சான்று
- சாதி சரிபார்ப்பு சான்றிதழ்
- வங்கி கணக்கு பாஸ்புக் மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
- இந்தத் திட்டத்தின் கீழ் கடனுக்கு விண்ணப்பிக்க, முதலில், வங்கியிலிருந்து உத்யோகினி கடன் படிவத்தை எடுக்கவும்.
- தொழில்முனைவோர் சம்பந்தப்பட்ட வங்கியின் இணையதளத்தில் இருந்து கடன் படிவத்தையும் பதிவிறக்கம் செய்யலாம்.
- படிவத்தை முழுமையாக நிரப்பவும்.
- படிவத்தை நிரப்ப, மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களின் நகல்களையும் ஒருவர் சமர்ப்பித்து உத்யோகினி கடன் படிவத்தை சம்பந்தப்பட்ட வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
- படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, நீங்கள் வழக்கமாக வங்கிக்குச் சென்று உங்கள் கடன் எப்போது அங்கீகரிக்கப்படுகிறது என்று விசாரிக்க வேண்டும்.
- how to apply for udyogini scheme
- udyogini loan scheme
- udyogini scheme
- udyogini scheme apply online
- udyogini scheme details
- udyogini scheme details 2023
- udyogini scheme details in kannada
- udyogini scheme details in tamil
- udyogini scheme details in telugu
- udyogini scheme in kannada
- udyogini scheme tamil
- udyogini yojana
- udyogini yojana free loan scheme
- udyogini yojana scheme
- women loan scheme