MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • பழைய தங்கத்தை விற்றால் லாபமா? மாற்றினால் லாபமா? உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் ரகசியம் இதோ!

பழைய தங்கத்தை விற்றால் லாபமா? மாற்றினால் லாபமா? உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் ரகசியம் இதோ!

நீங்கள் பழைய தங்கத்தை மாற்றவோ அல்லது விற்கவோ திட்டமிட்டுள்ளீர்களா? இதில் எது உங்களுக்கு அதிக லாபத்தை கொடுக்கும் என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Feb 25 2026, 02:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தங்கம் வெறும் ஆபரணமல்ல; கலாசாரம்
Image Credit : Getty

தங்கம் வெறும் ஆபரணமல்ல; கலாசாரம்

இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமின்றி நமது கலாசாரத்தின் ஒருபகுதியாகவே மாறி விட்டது. எவ்வளவு விலை உயர்ந்தாலும் தங்கம் மீதான மக்கள் மோகம் குறையாமல் இருப்பதற்கு இதுதான் காரணம். தலைமுறை தலைமுறையாக மக்கள் தங்கத்தை வாங்கி சேமித்து வருகின்றனர். பலர் பழைய நகைகளை அதிகம் வைத்திருப்பார்கள். அந்த நகையை விற்று பணமாக மாற்றலாமா? இல்லை அந்த நகையை மாற்றி விட்டு புது நகை வாங்கலாமா? என அவர்கள் குழப்பத்தில் இருப்பார்கள்.

24
தங்கத்தின் தரத்தை சரிபாருங்கள்
Image Credit : instagram

தங்கத்தின் தரத்தை சரிபாருங்கள்

ஆகவே பழைய தங்கத்தை விற்றால் லாபமா? மாற்றினால் லாபமா? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். நீங்கள் பழைய தங்கத்தை மாற்றவோ அல்லது விற்கவோ திட்டமிட்டுள்ளீர்களா? என்றால் முதலில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய வேலை தங்கத்தின் தரத்தை சரிபார்ப்பதுதான். ஏனெனில் சமீபத்திய ஆண்டுகளில் தங்கம் வாங்கியிருந்தால் அதில் ஹால்மார்க் முத்திரை இருக்கும். ஆனால் பழைய தங்கத்தில் ஹார்ல்மார்க் முத்திரை இருக்காது.

Related Articles

Related image1
உலகின் நம்பர் 1 தங்கச்சுரங்கம்.. 52 டன் தங்கம்.. தனி விமான நிலையம்.. வியக்க வைக்கும் தகவல்!
Related image2
தங்கம் விலை விண்ணை தொடும்.! பணம் செல்லாமல் போகும்.! தேனீக்கள் படையெடுக்கும்.! போர் வரும்.! 2026 குறித்து கணித்த தீர்க்கதரிசி.!
34
நகையை விற்கும்போது பணம் குறையும்
Image Credit : Asianet News

நகையை விற்கும்போது பணம் குறையும்

உங்களிடம் ஹால்மார்க் முத்திரை உள்ள தங்கம் இருந்தால், நகைக்கடைகாரர்கள் அல்லது நடகுகடைக்காரர்கள் அதிக விலைக்கு வாங்குவார்கள். ஹால்மார்க் இல்லை என்றால் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது. மேலும் நீங்கள் வாங்கிய விலைக்கு தங்கம் எடுக்கப்பட மாட்டாது. தங்கத்தை உருக்கும்போது ஏற்படும் இழப்பு (Melting loss) மற்றும் மார்க்கெட் விலையில் இருந்து 3% முதல் 5% வரை குறைத்தே பணமாக உங்களுக்கு தருவார்கள்.

நகையை மாற்றி புது நகை வாங்கினால் சிறந்ததா

உதாரணத்துக்கு இன்றைய விலையின்படி ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.14,680 என வைத்துக்கொள்வோம். நீங்கள் 10 கிராம் தங்கத்தை விற்றால் உங்களுக்கு சுமார் ₹1.35 லட்சம் மட்டுமே கிடைக்கக்கூடும். அதே வேளையில் அந்த 10 கிராம் பழைய தங்கத்தைக் கொடுத்து புதிய நகைகளை எடுக்க விரும்பினால், உங்களுக்கு சுமார் ரூ.1.45 லட்சம் மதிப்புள்ள நகைகள் கிடைக்கும். இதில் சிறிதளவு மட்டுமே சேதாரம் (Wastage) கழிக்கப்படும். நீங்கள் எந்தக் கடையில் நகையை வாங்கினீர்களோ, அங்கேயே மாற்றினால் சேதாரம் குறைவாகக் கணக்கிடப்படும்.

44
தங்கத்தை விற்றால் லாபமா? மாற்றினால் லாபமா?
Image Credit : Getty

தங்கத்தை விற்றால் லாபமா? மாற்றினால் லாபமா?

மேலும் தங்கம் விலை உச்சத்தில் இருக்கும்போது பழைய நகையை மாற்றினால் உங்களுக்கு அதிக மதிப்பு கிடைக்கும். மேலும் உங்கள் நகை பிஸ்கட் வடிவில் இருந்தால் முழுமையான தொகை கிடைக்கும். இதுமட்டுமின்றி உங்களுக்கு பிடித்தமான புதிய டிசைன் நகையை வாங்கிக் கொள்ள முடியும். ஆகவே பழைய தங்கத்தை விற்று பணமாக்குவதை விட அதனை மாற்றி புதிய நகைகள் வாங்குவதே சிறந்தது. இதுதான் என்றென்றும் உங்களுக்கு லாபகரமாக இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தங்கம்
தங்க நகை
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வாங்கும் போது இனிக்கும், கட்டும் போது கசக்கும்.. தனிநபர் கடன் vs கிரெடிட் கார்டு EMI.. எது பெஸ்ட்..?
Recommended image2
கர்ப்பிணிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. ரூ.5000 அள்ளி கொடுக்கும் அரசு..! விண்ணப்பிப்பது எப்படி..?
Recommended image3
பணம் போட்டா காசு, எடுத்தா காசு. பணம் இல்லேனாலும் காசு..! இலவசம்னு சொல்லி கொள்ளை அடிக்கும் வங்கிகள்..
Related Stories
Recommended image1
உலகின் நம்பர் 1 தங்கச்சுரங்கம்.. 52 டன் தங்கம்.. தனி விமான நிலையம்.. வியக்க வைக்கும் தகவல்!
Recommended image2
தங்கம் விலை விண்ணை தொடும்.! பணம் செல்லாமல் போகும்.! தேனீக்கள் படையெடுக்கும்.! போர் வரும்.! 2026 குறித்து கணித்த தீர்க்கதரிசி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved