Coimbatore Airport: கோவை உள்பட நாட்டின் 40 விமான நிலையங்களுக்கு மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்!!

இந்தியாவில் இருக்கும் பல்வேறு விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் எழுந்து இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Coimbatore, Patna, Jaipur airports received bomb threats through mail

கோயம்புத்தூர், பாட்னா, ஜெய்ப்பூர் உள்பட நாட்டின் பல்வேறு விமான நிலையங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதை அடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று அந்தந்த விமான நிலையங்களில் விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. 

முதல் கட்ட விசாரணையில் முகவரி இல்லாத மெயிலில் இருந்து சுமார் 40 விமான நிலையங்களுக்கு இன்று மதியம் 12.40 மணிக்கு மிரட்டல் விடப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட இருந்த விமானம் வெடிகுண்டு மிரட்டலை அடுத்து தாமதமாக புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் சோதனை நடத்தியதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எந்தப் பொருட்களும் இல்லை என்பது தெரிய வந்தது.

இதேபோல் சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த விமானத்திலும் சோதனை நடத்திய பிறகு இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் சுமார் 286 பயணிகள் புறப்பட்டுச் சென்றனர். வெடிகுண்டு மிரட்டல் வந்தவுடன் விமானம் முழுவதும் பரிசோதிக்கப்பட்டது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Shloka : தரைக்கு வந்த கடற்கன்னி.. இந்த விஷயத்தில் மாமியாருக்கே டப் கொடுத்த அம்பானியின் மருமகள் - Viral Pics!

கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் மெயிலில் வந்தது. இதையடுத்து, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு படை (BDDS) குழு, மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் (CISF) மோப்ப நாய் படையுடன் சேர்ந்து விமான நிலைய வளாகத்தில் சோதனை நடத்தி வெடிகுண்டு மிரட்டல் புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். 

இதேபோல் வதோதரா, ஜெய்பூர், பாட்னா விமான நிலையங்களுக்கும் மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விட்டப்பட்டு இருந்தது. வதோதரா சைபர் கிரைம் அதிகாரிகள் எங்கு இருந்து மெயில் வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வார துவக்கத்தில், டெல்லியில் உள்ள பல அருங்காட்சியகங்களுக்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டு இருந்தன. இதையடுத்து உயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன. டெல்லியில் உள்ள ரயில்வே அருங்காட்சியகம் உட்பட 10-15 அருங்காட்சியகங்களுக்கு இந்த அச்சுறுத்தல்கள் வந்து இருந்தன என்று அப்போது போலீசார் தெரிவித்து இருந்தனர். பின்னர், அந்த மிரட்டல்கள் போலியானவை என்பது தெரிய வந்தது. 

டாடாவை ஊதித் தள்ளிய மாருதி சுஸுகி! விற்பனையில் தூள் கிளப்பும் டாப் 25 கார்கள்! முழு லிஸ்ட் இதோ...

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios