- Home
- Gallery
- Shloka : தரைக்கு வந்த கடற்கன்னி.. இந்த விஷயத்தில் மாமியாருக்கே டப் கொடுத்த அம்பானியின் மருமகள் - Viral Pics!
Shloka : தரைக்கு வந்த கடற்கன்னி.. இந்த விஷயத்தில் மாமியாருக்கே டப் கொடுத்த அம்பானியின் மருமகள் - Viral Pics!
Business Women Shloka Mehta : பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் அண்மையில் இத்தாலி நாட்டில் நடந்தது.

anant ambani wedding
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் விரைவில் நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக தனது குடும்பத்தோடு இத்தாலி நாட்டில் மகிழ்ச்சியாக அவர் நேரத்தை செலவிட்டது அனைவரும் அறிந்ததே.
shloka mehta
இந்த சூழலில், எப்பொழுதும் அசத்தலான ஆடை அணிந்து அனைவரும் மனதை கொள்ளைகொள்ளும் முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானிக்கு, இப்பொது போட்டியாக அமைந்திருக்கிறார் அவரது மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தா.
shloka mehta Photos
இத்தாலி நாட்டில் நடைபெற்ற ஆனந்த அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் அவரது அண்ணன் ஆகாஷ் அம்பானியின் மனைவி ஸ்லோக மேத்தா அவர்களும் பங்கு பெற்றார்.
mukesh ambani daughter in law
அப்போது கடற்கன்னி போல அழகிய உடை ஒன்றை அணிந்து, கண்கவர் வண்ணம் பல புகைப்படங்களை எடுத்து அசத்தியிருக்கிறார் ஆகாஷ் அம்பானியின் மனைவி ஸ்லோகா மேத்தா.
Business women shloka
கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி பிறந்தவர் தான் ஸ்லோகா மேத்தா. இவர் பிரபல தொழிலதிபர் ரசல் மேத்தா அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
shloka in italy
இவருக்கும் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு வெகு விமர்சியாக திருமணம் நடைபெற்றது. ஆனந்த் அம்பானியின் திருமணத்தை போலவே அவர்களுடைய திருமணமும் பிரம்மாண்டமாய் நடைபெற்றது.
shloka mehta in italy
தற்பொழுது தனது கணவரின் தம்பி ஆனந்த் அம்பானியின் திருமண வைபோகங்கள் இத்தாலி நாட்டில் கோலாகலமாக நடந்த நிலையில், அதில் வித்தியாசமான ஆடை அணிந்து மேத்தா பங்கேற்று அசத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Dhanush: நண்பரின் பிறந்தநாளுக்கு புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து கூறிய தனுஷ்! வைரலாகும் போட்டோ!