Dindigul Accident: அதிமுக பிரமுகரின் கார் மோதி இருவர் பலி; உறவினர்கள் சாலை மறியலால் திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக பிரமுகரின் கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், அதிமுக பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

2 persons killed road accident in dindigul district vel

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி அருகில் நேற்று அதிமுக ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி தனது காரில் சென்றுள்ளார். அப்போது எதிரே கே.வேலூரை சேர்ந்த கருப்பணன் (வயது 55), சண்முகம் (40) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கருப்புசாமி  உயிரிழந்தார். 

Shocking Video in Coimbatore: சாலையில் நடந்து சென்ற முதியவரை ஆக்ரோஷமாக மித்து தள்ளிய காட்டு யானை

மேலும் படுகாயம் அடைந்த சண்முகம்  பழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனினில் சண்முகமும் உயிரிழந்தார். இந்த நிலையில் போலீசார் முத்துசாமி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். 

நடிகர் விஜய் எம்.ஜி.ஆர். போல சம்பாதித்த பணத்தை மக்களுக்கு கொடுக்க நினைக்கிறார் - செல்லூர் ராஜூ வெளிப்படையான பேச்சு

இதனிடையே காரில் வந்து விபத்து ஏற்படுத்திய அதிமுக ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு நிவாரணம் பெற்று தரக் கோரியும் உறவினர்கள் பழனி அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சட்டப்படி நடவடிக்கை இருப்பதாக போலீசார் தெரிவித்ததை அடுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பழனி- திண்டுக்கல் சாலையில் நடந்த மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios