19 வயதில்... 25 வயது நடிகை ஆண்ட்ரியாவுடன் காதல்! பிரேக்கப் பண்ண என்ன காரணம்? ரகசியத்தை உடைத்த அனிருத்!
நடிகை ஆண்ட்ரியா உடன் பிரேக்கப் செய்ய என்ன காரணம்? என்பது குறித்து பல வருடங்களுக்கு பின்னர் முதல் முறையாக ஓப்பனாக பேசி உள்ளார், இசை அமைப்பாளர் அனிருத்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். தற்போது 32 வயதாகும் இவர் 19 வயதிலேயே பிரபல நடிகையுடன் காதல் உறவில் கிசுகிசுக்கப்பட்டு சர்ச்சையில் சிக்கியவர். இவர் காதலித்தது வேறு யாரையும் அல்ல, பிரபல பாடகியும் நடிக்கையுமான ஆண்ட்ரியாவை தான்.
இவர்கள் இருவரும் சில வருடங்கள் டேட்டிங் செய்த நிலையில், இவர்களின் லிப் லாக் புகைப்படம் போன்றவை சமூக வலைதளத்தில் வெளியாகி, படு வைரலானது. பின்னர் இருவருமே காதலிப்பதை சூசகமாக தெரிவித்த போதிலும், மிக குறுகிய நாட்களிலே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
இளமை திரும்புதே... திரையரங்கில் எழுந்து நின்று ஆர்பாட்டதோடு FDFS பார்த்த தளபதி! ஃபேன் பாய் மொமெண்ட்!
அனிருத் 19 வயதில் ஆண்ட்ரியாவை காதலித்தபோது, அவருக்கு 25 வயது. அதாவது தன்னைவிட சுமார் ஆறு வயது பெரிய பெண்ணை தான் அனிருத் காதலித்தார். இவர்கள் இருவரும் பிரேக்கப் செய்து கொண்டு பிரிய காரணம், அவர்கள் இடையே இருந்த வயது வித்தியாசம் என்றும் கூறப்பட்டது. ஆனால் பிரேக்கப் குறித்து இருவருமே வாய்திறக்கவில்லை.
ஆனால் தற்போது பல வருடங்கள் கழித்து, அனிருத் முதல் முறையாக ஆண்ட்ரியா உடனான பிரேக்கப் குறித்து ஓப்பனாக பேசியுள்ளார். சமீபத்தில் கொடுத்த பேட்டியில்... காதல் பற்றியும் ஆண்ட்ரியா பற்றியும் அனிருத் கூறியுள்ளதாவது, "நான் இப்போது யாரையும் காதலிக்கவில்லை. ஆனால் காதலிக்கும் முடிவில் தான் இருக்கிறேன். இனி காதலித்தாலும், என்னை விட மூத்த பெண்ணை தான் காதலிப்பேன். அந்த வகையில் ஏற்கனவே ஆண்ட்ரியாவை காதலித்தேன் அப்போது எனக்கு 19 வயது, அவருக்கு 25 வயது.
Iswarya Menon: என்ன ஷேப்புடா... டைட் உடையில் தொடையை காட்டி கிக் ஏற்றும் ஐஸ்வர்யா மேனன்! ரணகள ஹாட் போட்டோஸ்...
அந்த வயதில் இது உண்மையிலேயே காதலா என்பது எனக்கு தெரியாது. நானும் பெரிதாக அதை கன்சிடர் செய்யவில்லை. எங்களுடைய கருத்து வேறுபாட்டுக்கு வயது வித்தியாசம் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அது பிரேக்கப்புக்கு காரணம் இல்லை. இருவருக்கும் செட்டாகவில்லை என்பது தான் முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.
அனிருத் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் இசையில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல் படமும் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் கெத்து காட்டியது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக அனிருத் இசையமைத்துள்ள லியோ, ஜவான், போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
RS Shivaji Passed Away: அதிர்ச்சியில் திரையுலகம்..! பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்..!
மேலும் ஜவான் படத்தின் மூலம் அனிருத் பாலிவுட் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். இவருக்கு ஒரு புறம் தீவிரமாக திருமணத்துக்கு பெண் தேடி வருவதாக கூறப்படும் நிலையில், அனிரூத் காதலிக்க தயாராக உள்ளேன் என கூறியுள்ளதால்... கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.