இளமை திரும்புதே... திரையரங்கில் எழுந்து நின்று ஆர்பாட்டதோடு FDFS பார்த்த தளபதி! ஃபேன் பாய் மொமெண்ட்!
தளபதி உற்சாகமாக அமெரிக்காவில், பிரபல ஹாலிவுட் பட நடிகரின் FDFS காட்சியை பார்த்து ரசித்த ஃபேன் பாய் மொமெண்ட் புகைப்படத்தை வெங்கட் பிரபு வெளியிட படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தளபதி விஜய்க்கு தென்னிந்திய திரையுலகில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார். குறிப்பாக இவரின் படம் வெளியானால் அன்று, அவரது ரசிகர்களுக்கு திருவிழா தான். திரையரங்கில், தோரணம், கட் அவுட், பிரமாண்ட மாலை, பாலபிஷேகம், பட்டாசு, தாரை... தப்பட்டை எனதெறிக்க விட்டு விடுவார்கள்.
தளபதியை கொண்டாடும் பல ரசிகர்களை நாம் பார்த்திருந்தாலும், தளபதியின் ஃபேன் பாய் மொமெண்ட்டை பார்த்திக்க வாய்ப்பில்லை. அப்படி பட்ட ஒரு அரிய காட்சியின் புகைப்படத்தை தான் இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட, இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
தளபதி தற்போது, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள 'தளபதி 68' திரைப்படத்தின் பணிகளுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளார். அங்குள்ள டெக்னாலஜி ஸ்டுடியோ ஒன்றில் ஃபுல்பாடி ஸ்கேனர் மற்றும் சில டெக்னிகல் பணிகளுக்காக விஜய் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று தளபதி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள திரையரங்கில் ’The Equalizer 3’ என்ற படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசித்தார். கதாநாயகன் என்ரிகோடுக்கும் காட்சியில், தன்னை மறந்து எழுந்து நின்று ஆர்பாட்டதோடு இந்த படத்தை ரசித்துள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக விஜய் ரசிகர்கள் முன்பு மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவராகவே பார்க்கப்படும் நிலையில், தளபதியின் இந்த செயல் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தளபதி தன்னுடைய இளமை காலத்துக்கே சென்று விட்டதாக இந்த புகைப்படத்திற்கு பலர் கமெண்ட் போட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.