வெறித்தன விஜய்சேதுபதி Is back - 2024ல் தெலுங்கு மாநிலத்தில் அதிக வசூல் செய்த மகாராஜா! எத்தனை கோடி தெரியுமா?
2024ல் தெலுங்கு மாநிலத்தில் அதிக வசூல் செய்த தமிழ் டப்பிங் படம் என்கிற புதிய சாதனையை மகாராஜா படம் படைத்துள்ளது. இதுவரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.
தனி ஹீரோவாக ஒரு வெற்றியை கொடுத்து விட வேண்டும் என்று போராடி கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு, 'மகாராஜா' திரைப்படம் மகுடம் சூடும் விதமாகவே அமைந்துள்ளது. அதிலும் விஜய் சேதுபதியின் 50-வது படம் என்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு.
ஒரு சாதாரண பார்பர் ஷாப் வைத்திருக்கும் விஜய் சேதுபதி தனது மகளுடன் வசித்து வருகிறார். ஒருநாள் பதறியடித்துக்கொண்டு காவல் நிலையம் செல்லும் இவர் தன் வீட்டிலிருந்த 'லட்சுமி' திருடு போய்விட்டதாகவும், அதனை ஸ்போர்ட்ஸ் கேம்ப்பிற்குச் சென்றிருக்கும் தன்னுடைய மகள் ஜோதி திரும்ப வருவதற்குள் கண்டு பிடித்து தரவேண்டும் என கூறுகிறார். ஆனால் இவர் லட்சுமி என குறிப்பிடுவதை எதை என்று ஒரு வித சஸ்பென்ஸுடன்... உயிரோட்டமான கதைக்களத்தோடு கூறி உள்ளார் இயக்குனர்.
இந்த படத்தில் ஹை லைட்டாக பார்க்கப்படுவது விஜய் சேதுபதியின் யதார்த்தமான நடிப்பும், கோவம், ஆத்திரம், என விரைப்பான போலீசாக இருக்கும் நட்டியின் நடிப்பும் தான். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தேர்வும் படத்திற்கு பக்காவாக பொருந்துவதே இப்படத்தின் முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
maharaja Movie Release Date
பல்வேறு திருப்புமுனைகளுடன்.. அடுத்து என்ன நடக்கும் என்கிற பரபரப்பிலேயே சீட் நுனியில் உட்கார வைத்து கைதட்டல்களை அள்ளியுள்ளார் இயக்குனர். பாலியல் ரீதியான பிரச்னையை பேசி இருப்பது இப்படத்தின் கூடுதல் பலமாகவே படுகிறது.
தமிழில் இப்படம் வெளியான முதல் நாளே... ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தன்னுடைய வெற்றியை உறுதி செய்த நிலையில், தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் படி 2024-ஆம் ஆண்டு ஆண்டு தெலுங்கு மாநிலத்தில் அதிக வசூல் செய்த படம் என்கிற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இதுவரை இப்படம் சுமார் 7.2 கோடி வசூலித்துள்ளதாம்.