- Home
- Gallery
- Pudhu Vasantham: இது தான் விஷயமா? சன் டிவி புதுவசந்தம் சீரியல் குழுவின் உற்சாக கொண்டாட்டம்! குவியும் வாழ்த்து!
Pudhu Vasantham: இது தான் விஷயமா? சன் டிவி புதுவசந்தம் சீரியல் குழுவின் உற்சாக கொண்டாட்டம்! குவியும் வாழ்த்து!
சன் டிவியில் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட புதுவசந்தம் சீரியலின் 300 வது எபிசோட் நிறைவடைந்ததை முன்னிட்டு, சீரியல் குழுவினர் அதனை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி உள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

சன் டிவியில் வழக்கமான குடும்ப கதைகளத்தை மையமாக வைத்து, மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'புது வசந்தம்'. இந்த சீரியலில் ஷியாம் ஜி கதாநாயகனாக நடிக்க, சோனியா சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் வைஷ்ணவி நாயக், நாதன் ஷியாம், சுஜித் அன்சாரி, தேவிப்பிரியா, சிவ கவிதா, VC ஜெயமணி, கௌதமி வேம்புநாதன், சாந்தி வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண், கதாநாயகனை விரும்பி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு மாமியார் வீட்டிற்குள் வரும் நிலையில் அவரை அந்த வீட்டில் இருந்து துரத்த கதாநாயகனின் அண்ணன் மனைவி போடும் திட்டங்கள் பலிக்கிறதா? தன்னுடைய வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள கதாநாயகி எப்படி போராடுகிறார் என்பதை இந்த சீரியலின் கதைக்களம்.
இந்த சீரியலை கார்த்திகேயன் என்பவர் இயக்கி வருகிறார். தினமும் மதியம் 1:30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், நேற்றுடன் 300 வது எபிசோடை எட்டியுள்ளது.
இதை முன்னிட்டு, ஒட்டுமொத்த சீரியல் குழுவினரும் கேக் வெட்டி தங்களுடைய முதல் மைல் கல்லை கொண்டாடியுள்ளனர். இது குறித்த போட்டோஸ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதோடு ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.