- Home
- Gallery
- திருமணத்திற்கு 44 வருட பழமையான அம்மாவின் புடவையை கட்டி இருந்த சோனாக்ஷி! வரவேற்பு புடவையின் ரேட் தெரியுமா?
திருமணத்திற்கு 44 வருட பழமையான அம்மாவின் புடவையை கட்டி இருந்த சோனாக்ஷி! வரவேற்பு புடவையின் ரேட் தெரியுமா?
சோனாக்ஷி சின்ஹா, நடிகர் ஜாகீர் இக்பாலை நேற்று திருமணம் செய்து கொண்ட நிலையில், இவரின் திருமணம் மற்றும் வரவேற்பு புடவை குறித்த தகவல் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

நடிகை சோனாக்ஷி சின்ஹா, ஜூன் 23, ஞாயிற்றுக்கிழமை, தனது நீண்டகால காதலரான ஜாகீர் இக்பாலை திருமணம் செய்து கொண்டார். ஜாகீர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால்... இவர்களின் காதலுக்கு சோனாக்ஷி வீட்டில் முதலில் சம்மதம் தெரிவிக்காத நிலையில், பின்னர் இவரின் பெற்றோர் காதலுக்கு பச்சை கொடி காட்ட இவர்களின் திருமணம் நடந்துள்ளது.
சோனாக்ஷி - ஜாகீர் திருமணம், மிகவும் எளிமையாக சத்ருகன் சின்ஹாவின் வீட்டில்... பதிவு திருமணமாக நடந்தது. இதில் சோனாக்ஷி அணிந்திருந்த நகை மற்றும், இவர் கட்டி இருந்த சேலை அவரின் அம்மாவுடையது.
கடந்த 44 வருடங்களுக்கு முன்னர் சத்ருகன் சின்ஹாவை திருமணம் செய்து கொள்ளும் போது பூனம் சின்ஹா அணிந்திருந்த அதே புடவையை தான், சென்டிமெண்டாக தன்னுடைய திருமணத்திற்கு அணிந்திருந்தார் சோனாக்ஷி. இது முழுக்க முழுக்க வெள்ளி இழையால் எம்ராய்டரி செய்யப்பட்ட ஐவரி புடவையாகும். இந்த புடவைக்கு ஏற்ற போல் தன்னுடைய அம்மாவின் பாரம்பரிய நகைகளை அணிந்திருந்தார்.
இதை தொடர்ந்து மாலை நடைபெற்ற, பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சோனாக்ஷி சிவப்பு பனாரசி பட்டுப் புடவையில் திகைக்க வைத்தார், ஜாஹீர் வெள்ளை நிற கோட் சூட் அணிந்திருந்தார். இந்த புடவையில் விலை, ரூ.79,800 என கூறப்படுகிறது.
பணக்கார வீட்டு செல்ல வாரிசாக பார்க்கப்படும், சோனாக்ஷி... சமீப காலமாக முன்னணி நடிகைகள் தனக்கென டிசைனர் வைத்து, உடைகளை பிரத்தேயகமாக தயார் செய்வதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், அப்படி எதுவும் செய்யாமல், திருமணத்தின் போது அம்மாவின் புடவையிலும், ரிசப்ஷனில் எளிமையான பனாரசி புடவை கட்டி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இவரின் வசதிக்கு தங்கத்திலேயே உடை செய்து, வைர நகைகளால் அல்லகாரம் செய்து கொள்ளலாம் ஆனால் இவரின் எளிமை பலரை கவர்ந்துள்ளது என கூறலாம். மேலும் சோனாக்ஷி திருமணத்தில் கஜோல், சல்மான் கான், ரேகா, அனில் கபூர், சஞ்சய் லீலா பன்சாலி, ஹூமா குரேஷி, சாய்ரா பானு போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவரின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சுமார் 1,000 விருந்தினர்கள் வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.