விஜய் டிவி சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து விலகிய நாயகி! புது ஹீரோயின் யார் தெரியுமா?
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்றான மகாநதி சீரியலில் இருந்து, நடிகை பிரதீபா விலக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.
விஜய் டிவி தொலைக்காட்சியில், சமீபத்தில் துவங்கப்பட்ட சீரியல்களில் ஒன்று மகாநதி. நான்கு பெண் பிள்ளைகளை பெற்ற தந்தை, தன்னுடைய குடும்பத்தின் சந்தோஷத்திற்காக வெளிநாட்டில் பாடுபட்டு சம்பாதிக்கும் பணத்தை, தன்னுடைய நண்பனை நம்பி கொடுக்க, அவர் மொத்த பணத்தையும் ஆட்டையை போட்டது மட்டும் இன்றி, அவர் வாங்க சொன்ன நிலத்தையும், சந்தானத்தின் பணத்தில் முறைகேடாக தன்னுடைய பெயருக்கு ரிஜிஸ்டர் செய்து கொள்கிறார்.
சந்தானம், தன் உயிர் தோழன் பசுபதியை சந்தித்து பேங்கில் போடசொல்லி கொடுத்திருந்த பணத்தை வித்ட்ரா செய்து தருமாறு கேட்க, பசுபதி அந்த பணம் முழுவதும் நிலம் ரிஜிஸ்டர் செய்யவே சரியாக இருந்தது, வேறு பணம் பேங்கில் இல்லை என்று சொல்ல, சந்தானம் அதிர்ச்சி அடைகிறார். அடுத்த நாள் காலை , கங்கா நிச்சயதன்று அவர் எழவில்லை, தூக்கத்திலயே மரணமடைகிறார்.
கங்காவை அவரது மாமா குமரன் திருமணம் செய்து கொண்டு, மூத்த பிள்ளை போல் அனைவரையும் பார்த்து கொள்கிறார். அதே நேரம் தன்னுடைய தந்தை இருந்த சோகத்தில் இருக்கும் காவேரியை நிவின் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் காவேரி காதலை ஏற்க, நிவினுக்கு பசுபதியின் மகளை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது.
இதனால் மனம் உடைந்த காவேரி, பசுபதிக்கு எதிராக... ஆதாரங்களை திரட்டி, போலீஸ் உதவியுடன் அவர் ஏமாற்றிய குறிப்பிட்ட தொகையை போராடி, தன்னுடைய தங்கை ஆபரேஷனுக்கு வாங்கி கொண்டு சென்னைக்கு வருகிறார். குமரன் அந்த காசை தொலைத்து விட, தன்னுடைய வாழ்க்கையை பணயமாக வைத்து, தங்கை ஆபரேஷனுக்கு பணம் செலுத்துகிறார் காவேரி.
மேலும் இந்த சீரியல்... நாளுக்கு நாள் எதிர்பாராத பல திருப்புமுனைகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீரியலில் கதாநாயகிகளில் ஒருவாறாக, அதாவது கங்கா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரதீபா சீரியலை விட்டு விலக உள்ளதாகவும், அவருக்கு பதில்... பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் திவ்யா கணேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஏன் பிரதீபா... இந்த சீரியலில் இருந்து விலகுகிறார் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. கங்கா கதாபாத்திரத்திற்கு திவ்யா கணேஷும் பொருத்தமாகவே இருப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.