ஜோவிகாவை விடுங்க பாஸ்! ஸ்கூல் டிராப் அவுட் ஆகி படிக்காததால் தான் பட்ட அவமானங்கள் பற்றி மனம்திறந்து பேசிய தனுஷ்
படிப்பை பாதியில் நிறுத்தியதால் தான் பட்ட அவமானங்கள் பற்றி நடிகர் தனுஷ் மனம் திறந்து பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
dhanush, jovika, vichithra
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகாவும், விசித்ராவும் கல்வியை பற்றி விவாதித்தது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆனது. வனிதாவின் மகள் ஜோவிகா, 8-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டார். அதற்கு மேல் படிப்பு வராததால் தான் இந்த முடிவை எடுத்ததாக பிக்பாஸ் வீட்டிலும் போட்டியாளர்கள் மத்தியில் கூறினார். இதைக்கேட்ட விசித்ரா நீ கண்டிப்பாக 10 அல்லது 12-ம் வகுப்பாவது முடிக்க வேண்டும் என்றும் அடிப்படை கல்வியின் முக்கியத்துவத்தை பற்றியும் பேசி இருந்தார்.
jovika
வனிதா மகள் ஜோவிகா பேசியதற்கு எந்த அளவுக்கு ஆதரவு இருந்ததோ, அதே அளவு ஆதரவு விசித்ராவின் பேச்சுக்கும் இருந்தது. கமல்ஹாசன் கூட விசித்ராவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். படிப்பின் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து நீயா நானா கோபிநாத் பேசிய வீடியோ ஒன்றும் கடந்த சில தினங்களாக வைரலாகி வந்தது. இதையடுத்து தற்போது தனுஷ் கல்வி குறித்து பேசியதையும் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
BiggBoss jovika
நடிகர் தனுஷின் குடும்பத்தில் அவரது அண்ணன் செல்வராகவன் இன்ஜினியரிங் படித்துள்ளார். அதேபோல் அவரது தங்கைகள் டாக்டருக்கு படித்துள்ளனர். ஆனால் தனுஷ் மட்டும் 11-ம் வகுப்போடு பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். இன்று அவர் சரளமாக ஆங்கிலம் பேசி வந்தாலும், ஆரம்ப காலகட்டத்தில் படிக்காததால் தான் சந்தித்த அவமானங்கள் பற்றியும், கல்வியின் முக்கியத்துவத்தை பற்றியும் பேசி உள்ளார்.
Dhanush
அதில் அவர் கூறியதாவது : “பள்ளி படிப்பை பாதியில் விட்டுவிட்டு நடிக்க வந்ததால் பட்டப்படிப்பை படிக்க முடியாமல் போனதை நினைத்து பலமுறை வருந்தி இருக்கிறேன். நட்சத்திர ஓட்டலில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள செல்லும்போது அங்கு இருப்பவர்கள் அனைவரும் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவர்கள். நம்மால் அப்படி பேச முடியவில்லையே என எனக்குள்ளே தாழ்வுமனப்பான்மை இருந்தது. நான் படிக்காதவன் என்பதை சிலர் சொல்லியும் காட்டி உள்ளனர்.
அதனால் தயவு செஞ்சு ஒரு டிகிரியாவது படிங்க. படங்களில் வேண்டுமானால் ஹீரோக்கள் படிக்காமல் இருப்பார்கள், ஆனால் படித்தால் தான் நிஜத்தில் ஹீரோ ஆக முடியும் என நடிகர் தனுஷ் தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுறுத்திய பழைய வீடியோ தற்போது மீண்டும் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்...Bigg Boss Promo: உனக்கு வரலையா மூடிக்கிட்டு உக்காரு..! பிரதீப் - நிக்சன் இடையே வெடித்த பயங்கர மோதல்..!