Nayanthara: திரையுலகில் இயக்குனராக அவதாரம் எடுக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!?வைரலாகும் புகைப்படம்..!
நடிப்பு, பிசினஸ், பட தயாரிப்பு, என கலக்கிக் கொண்டிருக்கும் நயன்தாரா தற்போது உள்ளாரா என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை நயன்தாரா, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். தன்னுடைய இளம் வயதிலேயே திரையுலகின் மீது உள்ள ஆர்வத்தால், படித்துக் கொண்டே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். பின்னர் திரைப்பட வாய்ப்புகளை தேட துவங்கினார். 2003 ஆம் ஆண்டு, மலையாளத்தில் 'மனசினக்கரே' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த படம் தோல்வியை தழுவியதால், மலையாள திரையுலகில் ஆரம்பத்தில் கண்டுகொள்ள படாத நடிகையாக இருந்தார். பின்னர் தமிழில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ஐயா' படத்தில் ஹீரோயினாக நடித்தார். முதல் படத்திலேயே தன்னுடைய அழகால் ரசிகர்களை கவர்ந்த நயன்தாரா, பின்னர் ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி,விக்ரம், போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
Joe Movie Review: ஃபீல் குட் மூவியா... ஓவராக பீல் பண்ண வைத்த மூவியா? ரியோ ராஜின் 'ஜோ' பட விமர்சனம்!
சுமார் 20 வருடங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்து வரும் இவர், சமீப காலமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்தது வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த மாயா, கோலமாவு கோகிலா, அறம் போன்ற படங்கள் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக வசூல் செய்தது.
கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கரம் பிடித்த நயன்தாரா திரையுலகில் நடிகையாக மட்டுமே இல்லாமல், ரௌடி பிச்சர்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும், வெற்றி நடை போட்டு வருகிறார். அது மட்டும் இன்றி லிப் பாம், ஸ்கின் கேர், நாப்கின், ஸ்டாட்டர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்த உள்ளார்.
நடிகையாகவும், தொழிலதிபராகவும், மட்டும் இன்றி... சிறந்த குடும்ப தலைவி என்றும் பெயரெடுத்த நயன்தாரா தற்போது, ஒன்றை வெளியிட்டு, "புதிய தொடக்கங்களில் மேஜிக்கை நம்புங்கள்" என பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் நீங்கள் இயக்குனராக அறிமுகமாகிறீர்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த படம் நயன்தாரா நடித்து வரும் மண்ணாங்கட்டி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்க, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரிகிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டியூட் விக்கி இந்த படத்தை இயக்க, சீன் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D