Joe Movie Review: ஃபீல் குட் மூவியா... ஓவராக பீல் பண்ண வைத்த மூவியா? ரியோ ராஜின் 'ஜோ' பட விமர்சனம்!
இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில், ரியோ ராஜ் ஹீரோவாக நடித்து இன்று வெளியாகி உள்ள திரைப்படம் 'ஜோ'. வளர்ந்து வரும் இளம் நடிகரான ரியோ ராஜ், மிகவும் கவனமாக கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நிலையில், இந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்ததா? இல்லையா என்பது குறித்து இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மாணவனாக வருகிறார் ரியோ ராஜ். இவர் தன்னுடைய கல்லூரியில் படிக்கும் நாயகி மாளவிகாவை துரத்தி துரத்தி காதலிக்க, ஒரு கட்டத்தில் இருவருமே காதலிக்க துவங்குகின்றனர். பின்னர் நான்காண்டு கல்லூரி படிப்பு முடிந்து இருவருமே அவரவர் சொந்த ஊருக்கு செல்லும் நிலையில், ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் இரு வீட்டு பெற்றோருக்கும் தெரிய வருகிறது. நாயகி வீட்டில் உண்டாகும் எதிர்ப்பால் மாளவிகா தற்கொலை செய்து கொண்டு இறக்கிறார்.
இதனால் ஏற்படும் மன உளைச்சலால், குடிகாரனாக மாறுகிறார் நாயகன் ரியோ ராஜ். மகனை எப்படியும் திருத்த வேண்டும் என்பதற்காக அவருடைய பெற்றோர் இன்னொரு நாயகியான பவ்யாவை திருமணம் செய்து வைக்கின்றனர். காதல் வாழ்க்கையை தொலைத்த சோகத்தில் ரியோ இருக்க, பவ்யா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த கசப்பான சம்பவங்களால் வேதனையோடு வாழ்கிறார். இதுவே இவர்கள் இருவருக்கிடையையும் மோதல் உண்டாக காரணமாக அமைகிறது.
இதைத் தொடர்ந்து இதனை சரி செய்வதற்காக ரியோ ராஜ் எப்படிப்பட்ட முயற்சிகளை மேற்கொள்கிறார்? அதில் ஜெயித்தாரா, இருவரும் வாழ்க்கையில் இணைந்தார்களா? ரியோ ராஜுக்கு முன்பு செய்த உதவி எந்த விதத்தில் கை கொடுக்கிறது, என்பதை காதல், கண்ணீர், நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் இயக்குனர். இந்த படத்தை டாக்டர் டி அருள் ஆனந்த் மற்றும் மேத்தியூ அருள் ஆனந்த் ஆகியவர் தயாரித்துள்ளனர். வருண் கே.ஜி. படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, இந்த படத்திற்கு பேச்சுலர் படத்திற்கு இசையமைத்த செந்தில்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பாடல்கள் மற்றும் BGM மிகப்பெரிய பலம்.
Vichithra: விசித்ரா சொல்வது சுத்த பொய்.. எல்லாம் பக்கா பிளான்! பகீர் கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்!
வழக்கமான காதல் படங்களில் இடம்பெறும் காதல் காட்சிகளுடன் 'ஜோ' படம் துவங்கினாலும், யாரும் எதிர்பாராத கிளைமேக்ஸுடன் முடிவடைவது தான் இப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இப்படம் குறித்து ட்விட்டரில் ரசிகர்கள் கூறியுள்ள விமர்சனங்கள் இதோ...
ரசிகர் ஒருவர் #JOE நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஃபீல் குட், ஃபுல் அண்ட் ஃபுல் லவ் படம். இது போன்ற படங்களை பார்ப்பவர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் என கூறியுள்ளார்.
மற்றொரு ரசிகர் என்னையா, ஒரே ஜாலி ரொமான்ஸ் ஆ போகுதேனு நெனைச்சிடு இருக்கும் போது இண்டர்வல்ல அப்படி ஒரு சீன வச்சிட்டிங்களே யா, அருமையான முதல் பாதி.. எமோஷ்னலான முதல் பாதி என தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ரசிகை ஒருவர் ஜோ திரைப்படம் ஒரு மகிழ்ச்சியான ஆச்சரியம் என கூறியுள்ளார். ரியோ ராஜ் இந்த இதயப்பூர்வமான கதையில் பிரகாசிக்கிறார். உண்மையான நடிப்பை வழங்கும்போது உணர்ச்சிகளை தடையின்றி நெசவு செய்கிறது. இது மனித ஆவியின் நெகிழ்ச்சிக்கு ஒரு தொடுகின்ற அஞ்சலி. என கூறி இந்த படத்திற்கு 5க்கு 3.2 மதிப்பெண்கள் கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து மற்றொரு ரசிகர், "ரொமான்ஸுடன் ஆரம்பித்து உணர்ச்சிகரமான படம். இடைவெளியில் உங்களை அழவைக்கும் அசாதாரண காட்சிகள் என புகழ்ந்து தள்ளியுள்ளார்.
மற்றொரு ரசிகர் அழிவற்ற காதல் கதை. ரியோராஜ் மற்றும் மாளவிகா அவர்கள் கேரக்டரில் வாழ்ந்துள்ளனர். முதல் பாதி யதார்த்தம், 2வது பாதி சினிமா. பயிற்சியாளர் ஆர்யா, ஜோ நண்பரின் கும்பல் காமெடி பூஸ்ட் . எமோஷனல் கனெக்ட் ஒட்டுமொத்தத்தில் பார்க்க வேண்டிய ஒரு நல்ல படம் என தெரிவித்துள்ளார்.