MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அன்று திருமணமான நடிகருடன் காதல்.. இன்று இரட்டை குழந்தைகளுக்கு அம்மா - யார் இந்த நடிகை தெரிகிறதா?

அன்று திருமணமான நடிகருடன் காதல்.. இன்று இரட்டை குழந்தைகளுக்கு அம்மா - யார் இந்த நடிகை தெரிகிறதா?

திருமணமான நடிகருடன் காதல், இரண்டு முறை காதல் தோல்வி என கோலிவுட்டின் சர்ச்சை ராணியாக வலம் வரும் நடிகையின் குழந்தை பருவ புகைப்படங்கள் வைரலாகிறது.

2 Min read
Author : Ganesh A
| Updated : May 21 2024, 09:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Nayanthara with her Father

Nayanthara with her Father

கேரளாவில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் நயன்தாரா. இவரது இயற்பெயர் டயானா குரியன். இவர் மலையாள படத்தில் நடித்தபோது தான் இயக்குனர் ஒருவர் அவரது பெயரை நயன்தாரா என மாற்றினார். பின்னர் தமிழில் ஹரி இயக்கத்தில் வெளிவந்த ஐயா படம் மூலம் அறிமுகமானார் நயன்தாரா. அப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த இவர், முதல் படத்திலேயே டிரெண்டிங் நாயகியாக உருவெடுத்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
nayanthara and her mother

nayanthara and her mother

அதற்கு காரணம் ஐயா படத்தில் இடம்பெற்ற ‘ஒரு வார்த்தை சொல்ல’ என்கிற பாடல் தான். அப்பாடலில் நயன்தாராவின் நடனம் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்ததோடு, அவர் கட்டிவந்த சேலையும் அந்த சமயத்தில் செம்ம டிரெண்டிங் ஆனது. ஐயா படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பின்னர் ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி திரைப்படத்தில் நடித்தார் நயன்தாரா. இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் கோலிவுட்டின் ராசியான ஹீரோயினாக உருவெடுத்தார் நயன்.

38
Lady superstar

Lady superstar

பின்னர் சிம்புவுக்கு ஜோடியாக வல்லவன் படத்தில் நடித்தபோது அவர் மீது காதல் வயப்பட்டார் நயன்தாரா. அந்த சமயத்தில் இருவரும் ஒன்றாக டேட்டிங் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் ஓட்டல் ரூமில் நெருக்கமாக லிப்கிஸ் அடித்த புகைப்படங்கள் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தின. அச்சம்பவத்துக்கு பின்னர் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர்.

48
nayanthara photos

nayanthara photos

சிம்பு உடனான காதல் தோல்விக்கு பின்னர் நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா மீது காதலில் விழுந்தார் நயன்தாரா. அந்த சமயத்தில் பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகளும் இருந்த நிலையில், அவரை நயன் காதலித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் பிரேக் அப் செய்து பிரிந்தனர்.

இதையும் படியுங்கள்... விடாமுயற்சிக்கு விடிவுகாலம் பொறந்தாச்சு... ஒருவழியாக ஆரம்பமாக உள்ள ஷூட்டிங் - எப்போ ரிலீஸ் தெரியுமா?

58
nayanthara movies

nayanthara movies

இரண்டு முறை காதல் தோல்வியை சந்தித்த நயன்தாரா, இனி காதலே வேண்டாம் என முடிவெடுத்து சினிமாவில் பிசியாக நடிக்க தொடங்கினார். அப்போது தான் நானும் ரெளடி தான் படத்தில் நடிக்க கமிட்டானபோது இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது நயனுக்கு கிரஷ் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது காதலாகவும் மாறியது. இருவரும் சில ஆண்டுகள் ரகசியமாக காதலித்து வந்தனர்.

68
nayanthara age

nayanthara age

பின்னர் இவர்களது காதல் மேட்டர் லீக் ஆனதால் பட விழாக்களில் ஜோடியாக கலந்துகொள்ள தொடங்கினர். சுமார் 7 ஆண்டுகள் உருகி உருகி காதலித்த இந்த ஜோடி கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணத்தில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான பிரபலங்கள் படையெடுத்து வந்து கலந்துகொண்டனர்.

78
Nayanthara family

Nayanthara family

திருமணமான நான்கே மாதங்களில் நயன் விக்கி ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. நான்கே மாதத்தில் எப்படி குழந்தை என அனைவரும் ஷாக் ஆன நிலையில், அவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது. இந்த குழந்தைகளுக்கு உயிர், உலக் என பெயரிட்டு உள்ளனர்.

88
nayanthara childhood photos

nayanthara childhood photos

இப்படி கோலிவுட்டின் சர்ச்சை ராணியாக வலம் வந்த நயன்தாராவின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களில் நயன்தாரா செம்ம கியூட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... Sangeetha : "எனக்கு மகள் இல்லை.. உண்மை இது தான்" - ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா சொன்ன லேட்டஸ்ட் தகவல் என்ன?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved